Oruvanukku Oruthiyena

Oruvanukku Oruthiyena Song Lyrics In English


பாடகர்கள் : கே எஸ் சித்ரா மற்றும் வாணி ஜெய்ராம்

பாடலாசிரியர் : வாலி

ஒருவனுக்கு ஒருத்தியென உறவுக் கொள்ள உரிமை உள்ள வண்ணமயில் கண்ணகியும் நானே

சிலம்பின் மணி சிதற மனம் சிதற தலைவன் அவன் திருச்சபையில் நடனமிடும் மாதவியும் நானே

மலரெடுத்து குழல் முடித்து மணவறையில் கரம் பிடித்த குல மகளும் குண மகளும் இவளே

கனிகை என பேர் இருந்தும் கணவர் என ஒருவர் வசம் சரணடைந்த சரச மகள் இவளே

ஒருவனுக்கு ஒருத்தியென உறவுக் கொள்ள உரிமை உள்ள வண்ணமயில் கண்ணகியும் நானே

நான் போட்ட மாலை எந்நாளுமே நீ தீண்டக் கூடாது போடி நாள்தோறும் மாலை உன் காவலன் வந்தானே என் வாசல் தேடி

நாணங்கள் ஏதும் இல்லாதவள் பெண்ணல்ல பேயல்லவோ பசி வந்த வேளை தீர்க்காதவள் கனியல்ல காயல்லவோ

அடுத்தவளின் குடித்தனத்தில் இடம் பிடித்தல் முறையா ஒரு முகத்தில் இரு விழிகள் இருப்பதென்ன தவறா

எனக்கெனவே பிறந்தவன்டி இடையில் என்னை கலந்தவன்டி இனியும் இந்த விரசமென்ன இருவருக்குள் சரசமென்ன

ஒருவனுக்கு ஒருத்தியென உறவுக் கொள்ள உரிமை உள்ள கண்ணின் மணி ருக்குமணி நானே

தலைவன் ரதம் நடத்த சமர் களத்தில் வடம் பிடித்த வனிதை இந்த பாமா எனும் அழகு மலர் தானே

கையோடு ஏந்தும் புல்லாங்குழல் அது போல நான் கொண்ட சொந்தம் கண்ணான கண்ணன் பிருந்தாவனம் எந்நாளும் பாமாவின் பந்தம்

நீராடும் கங்கை நானல்லவோ என் போல் நீயாகுமோ ஆனந்த வெள்ளம் நான்தானடி யமுனைக்கு ஈடாகுமோ

எனக்கிருக்கும் உரிமையினை பறிப்பதென்ன முறையோ ஒரு நதியை இரு கரையும் தழுவுவது தவறோ


கடல் கலந்த நதி இதுதான் உடன் இணைந்த விதி இதுதான் இனியும் அந்த மயக்கமென்ன இருவருக்குள் நெருக்கமென்ன

ஒருவனுக்கு ஒருத்தியென உறவுக் கொள்ள உரிமை உள்ள பருவ மகள் பொம்மி இவள்தானே

தலைவன் மனமறிந்து குணமறிந்து மலர்ப்படுக்கை விரித்து வைத்த வடிவழகி வெள்ளையம்மா நானே

தென்பாண்டி வீரன் என் மன்னவன் நான் மட்டும் கொண்டாடும் தேவன் நானென்ன சொல்ல என் நெஞ்சிலும் நீங்காமல் வாழ்கின்ற ஜீவன்

நான் கொஞ்சும் மேனி எந்நாளுமே நீ கொஞ்சக் கூடாதடி உன் மன்னன் வந்தால் எந்நாளுமே என் வாசல் மூடாதடி

புருஷன் என்ன பலர் விரும்பும் பொதுவுடைமை பொருளா இரு மனைவி முருகனுக்கு இருப்பதென்ன தவறா

மனிதரெல்லாம் இறைவனல்ல உணர்ச்சியில்லா மரமுமல்ல விளக்கவுரை இனி எதற்கு விலகி விடு வழக்கெதற்கு

ஒருவனுக்கு ஒருத்தியென உறவுக் கொள்ள உரிமை உள்ள முதல் வீடு என் வீடு தானே

இரவில் நிலவெரிக்க குளிரெடுக்க இரு கரத்தில் அரவணைக்க சின்ன வீடு என் வீடுதானே

உலகறிய ஊரறிய அருந்ததியும் தானறிய சம்சாரம் எந்நாளும் இவளே

அடுத்தவரும் அறியாமல் வேறார்க்கும் தெரியாமல் ஆனந்தம் தருபவளும் இவளே

ஒருவனுக்கு ஒருத்தியென உறவுக் கொள்ள உரிமை உள்ள முதல் வீடு என் வீடு தானே

இரவில் நிலவெரிக்க குளிரெடுக்க இரு கரத்தில் அரவணைக்க சின்ன வீடு என் வீடுதானே

பிரபு அன்பே பிரபு அன்பே