Othuvar Un Peyar Othuvar

Othuvar Un Peyar Othuvar Song Lyrics In English


பாடகர்கள்  : சூலமங்கலம் ராஜலக்ஷ்மி மற்றும் டாக்டர் பலமுரளிருஷ்ணா

இசை அமைப்பாளர் : கே வி மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளங்கவர் கள்வன்

ஏடுடைய மலரான் உனை நான் பணிந்தேத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மானிவனன்றே!

ஓதுவார் உன் பெயர் ஓதுவார் ஓதுவார் உன் பெயர் ஓதுவார் ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின் உட்பொருள் நாடுவார் ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

ஓம் எனும் மந்திரத்தின் உட்பொருள் நாடுவார் ஓதுவார் உன் பெயர் ஓதுவார்


ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை

நாதா உன் திருநாமம் கசப்பதில்லை நாதா உன் திருநாமம் கசப்பதில்லை எங்கள் ஆதாரமான இடம் உனது தில்லை

ஓதுவார் உன் பெயர் ஓதுவார் ஓதுவார் உன் பெயர் ஓதுவார் ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின் உட்பொருள் நாடுவார் ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

கங்கை கொண்டான் என் மேல் கருணை கொண்டான் பிறை திங்கள் கொண்டான் நெஞ்சைத் திருடிக் கொண்டான்

மங்கை கொண்டான் எனது மனதை கொண்டான் மங்கை கொண்டான் எனது மனதை கொண்டான் இவையாவும் கொண்டான் எந்தன் மாலையும் கொண்டான்

இருவர் : ஓதுவார் உன் பெயர் ஓதுவார் ஓதுவார் உன் பெயர் ஓதுவார் ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின் உட்பொருள் நாடுவார் ஓதுவார் உன் பெயர் ஓதுவார்