Paadiya Azhagu Nilave

Paadiya Azhagu Nilave Song Lyrics In English


ஏஹேஓஹோஓஹ்ஹோ ஆஹஆஹஆஹாலலா லால லால லா ஹீஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ நீயல்லால் ஏதடி

பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே

நிழலை பிரிந்த உடல் நகத்தை மறந்த விரல் நதியை துறந்த கடல் ஏதம்மா எனது எனது என நினைத்து நினைத்து தினம் வடித்து எடுத்த சிலை நீயம்மா

வானமே மாறலாம் வையமே மறையலாம் ஆயிரம் ஆண்டுகள் காதல்தான் வாழலாம் நீயல்லால் ஏதடி

பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே


ஒருவன் மனதை தொட்டு உறவை வளர்த்துவிட்டு சிறகை விரித்த சிட்டு நீதானோ உருகி உருகி உடல் கருகி கரைந்து விழ நெருப்பில் விழுந்த மலர் நான்தானோ

ஓய்ந்ததே காவியம் தேய்ந்ததே ஓவியம் கூறடி கண்மணி யாரிதன் காரணம் நீயல்லால் ஏதடி சுகம்

பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே

நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ நீயல்லால் ஏதடி

பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே