Paar Magaley Paar 2 |
|---|
பார் மகளே பார்
பார் மகளே பார்
பார் மகளே பார்
பரந்த உலகினைப் பார்
பாசம் மலர்வது பார்
பக்கம் துணையினை பார்
உரிமையில் ஒன்று
உறவினில் ஒன்று
ஓரிடம் சேர்ந்தது பார்
பார் மகளே பார்
இரண்டும் உண்மை
என்றே நினைத்தால்
இரண்டும் ஒன்றாகும்
இதில் ஒன்றே உண்மை
என்றே நினைத்தால்
இரண்டும் தவறாகும்
இரண்டும் உண்மை
என்றே நினைத்தால்
இரண்டும் ஒன்றாகும்
இதில் ஒன்றே உண்மை
என்றே நினைத்தால்
இரண்டும் தவறாகும்
வாசம் என்பது
மலர்களில்தானா
மனதினில் ஏன் இல்லை
பாசம் என்பது
பிறப்பினில் தானா
வளர்வதில் ஏன் இல்லை
பார் மகளே பார்
பரந்த உலகினைப் பார்
பாசம் மலர்வது பார்
பக்கம் துணையினை பார்
உரிமையில் ஒன்று
உறவினில் ஒன்று
ஓரிடம் சேர்ந்தது பார்
பார் மகளே பார்
