Paaril Sandhai Koottam

Paaril Sandhai Koottam Song Lyrics In English


சந்தைக் கூட்டமடாஆஆஆஆஆஆ உலகமே சந்தைக் கூட்டமடா இதில் உலவிடும் மனிதரிலே நல்லோர் பொல்லார் இரு வகையாம் குணமுடையோர் வருவார் போவார் அது போலே

பாரில் சந்தைக்கூட்டம் பல வகை மனித நடமாட்டம் பாரில் சந்தைக்கூட்டம் பல வகை மனித நடமாட்டம்

ஏர் பிடித்து தினம் பாடுபட்டு உடல் இளைக்கிறான் ஒருவன் அவன் வேர்வை சிந்தி விளையும் சுகத்திலே திளைக்கிறான் ஒருவன்

ஏர் பிடித்து தினம் பாடுபட்டு உடல் இளைக்கிறான் ஒருவன் அவன் வேர்வை சிந்தி விளையும் சுகத்திலே திளைக்கிறான் ஒருவன் பாரில் இதோ சந்தைக்கூட்டம் பல வகை மனித நடமாட்டம்

கை முதல் இல்லாததாலே கடன் வாங்கினான் வட்டி மேலே கை முதல் இல்லாததாலே கடன் வாங்கினான் வட்டி மேலே


நம்பியே உடன் பொங்கும் வெய்யிலிலே செய்கிறான் வியாபாரம் நம்பியே உடன் பொங்கும் வெய்யிலிலே செய்கிறான் வியாபாரம் என்ன செய்தும் இல்லையே சாரம்

வாங்கிய கடனை தந்தது போக வட்டிக்கே சரியாச்சு வாங்கிய கடனை தந்தது போக வட்டிக்கே சரியாச்சு லாபம் வட்டிக்கே சரியாச்சு பாடுபட்டதெல்லாம் வீணாச்சு

வட்டி வங்கி கொள்ளையடிப்பவன் வாழ்வு உயரலாச்சு வட்டி வங்கி கொள்ளையடிப்பவன் வாழ்வு உயரலாச்சு

வாழ நினைக்கிறான் ஒருவன் அவனை வாட்டி வதைக்கிறான் ஒருவன் வாழ நினைக்கிறான் ஒருவன் அவனை வாட்டி வதைக்கிறான் ஒருவன் பாரில் இதோ சந்தைக்கூட்டம் பல வகை மனித நடமாட்டம்