Paattodu Ragam Inge

Paattodu Ragam Inge Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

நீதி மதயானை நீதி வழி சென்றதம்மா மங்கை நெஞ்சப் பெருங்கோயில் நினைவிழந்து வாடுதம்மா தங்கை சட்டத்தில் பாசம் தனை மறந்து ஏங்குதம்மாஏங்குதம்மா

பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா தாளம் பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா மோதுதம்மா

ஒரு தாயின் மக்களுக்கு ஒன்றே ரத்தம் அந்த உறவை மறக்க வைக்கும் நீதியின் முத்தம் ஒரு தாயின் மக்களுக்கு ஒன்றே ரத்தம் அந்த உறவை மறக்க வைக்கும் நீதியின் முத்தம் தாலிக்கும் தர்மத்துக்கும் பகைமையா தாலிக்கும் தர்மத்துக்கும் பகைமையா குல தர்மமே சட்டத்துக்கு அடிமையா


பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா மோதுதம்மா

சம்சாரக் கோவிலுக்கு அவனே தெய்வம் தங்கை தன்னோடு பிறந்ததினால் அவளே தீபம் சம்சாரக் கோவிலுக்கு அவனே தெய்வம் தங்கை தன்னோடு பிறந்ததினால் அவளே தீபம் தீபமே தெய்வத்துடன் மோதுமா தீபமே தெய்வத்துடன் மோதுமா அது மோதினால் கோவில் உள்ளம் வாழுமா

பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா தாளம் பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா