Paravai Kadhal Paravai

Paravai Kadhal Paravai Song Lyrics In English


பறவை காதல் பறவை நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை பறவை காதல் பறவை நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை

அன்று பிரிந்தது அன்னக்கிளி இன்று இணைந்தது எண்ணப்படி விழிகள் மலரும் இந்த அதிகாலை நேரத்தில் பனி சிந்தும் ஈரத்தில்

பறவை காதல் பறவை நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை

ஏனிந்த மயக்கம் இன்று எவரை கேட்பதோ தேன் எங்கு இனிக்கும் என்று எறும்பை கேட்பதோ மெல்ல மெல்ல மேனியில் மின்னல் வந்து போகுதோ உள்ளே என்ன ஓசையோ ஓடை ஒன்று ஓடுதோ இடுப்பில் சரியும் சேலைப் போல் இதயம் நழுவுதோ

பறவை காதல் பறவை நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை


நான் இன்று விழித்துக் கொண்டே கனவு காண்கிறேன் ஓஓஓஅந்த பனித் துளிக்குள் உலகம் பார்க்கிறேன் காதல் வந்த பின்புதான் ஞானம் கொஞ்சம் வந்தது மௌனம் என்னும் வார்த்தைக்கு ஏதோ அர்த்தம் உள்ளது வானுக்கும் மண்ணுக்கும் ஊஞ்சல் கட்ட வசதி வந்தது

பறவை காதல் பறவை நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை பறவை காதல் பறவை நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை

அன்று பிரிந்தது அன்னக்கிளி இன்று இணைந்தது எண்ணப்படி விழிகள் மலரும் இந்த அதிகாலை நேரத்தில் பனி சிந்தும் ஈரத்தில்

பறவை காதல் பறவை நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்