Pattanamthan Pogalamadi

Pattanamthan Pogalamadi Song Lyrics In English


இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி

பட்டணம் தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே

டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாயிப் போயிடுவீங்க அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா

கெட்டவங்க பட்டணத்தை ஒட்டிக்கோணும் என்பதாலே கெட்டவங்க பட்டணத்தை ஒட்டிக்கோணும் என்பதாலே பட்டிக்காட்டை விட்டுப் போட்டு பல பேரும் போவதாலே

கட்டுச் சோத்தைக் கட்டிக் கொள்ளடி பொம்பளே தட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே

அங்கே வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க? வெட்கக் கேட்டை சொல்றேங் கேளுங்க அங்கே வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க? வெட்கக் கேட்டை சொல்றேங் கேளுங்க

காலேஜு படிப்பு காப்பியாத்துதாம் பிஏ படிப்பு பெஞ்சு துடைக்குதாம் ஆளை ஏய்ச்சி ஆளு பொழைக்குதாம் அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம் மேலே போனது நூத்திலே ஒண்ணாம் மிச்சம் உள்ளது லாட்டரி அடிக்குதாம் எப்படி

ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே எண்ணாம தவிக்கையிலேமாப்பிள்ளே ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே எண்ணாம தவிக்கையிலே உன்னாலே என்னாகும் எண்ணாம போனா பின்னாலே கேடு மாமா

ராத்திரிப் பகலா ரிக்க்ஷா இழுப்பேன் நைசா பேசி பைசா இழுப்பேன் ராத்திரிப் பகலா ரிக்க்ஷா இழுப்பேன் நைசா பேசி பைசா இழுப்பேன் டிராமா சினிமா சர்க்கஸ் பார்ப்பேன் ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்

வேர்த்துப் புழுங்குனாப் பீச்சுக்குப் போவேன் மீந்த பணத்திலே மீனு வாங்குவேன் ஆத்தாடி உன் கையிலே குடுப்பேன் ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன் மேலே?


இதுக்கு மேலே சொல்ல மாட்டேண்டி பொம்பளே இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி நான் இப்போதே போவோணும் உங்கப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி

பட்டணம் தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே

டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாயிப் போயிடுவீங்க அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா

மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை கணக்குக்கும் மீறி பணம் வந்த போது மனுஷனை சும்மா இருக்க விடாது

என்னை மறந்து உன்னை மறந்து எல்லா வேலையும் செய்யவே துணிஞ்சு இரவு ராணிகள் வலையிலே விழுந்து ஏமாந்து போவேஇன்னும் கேளு அப்புறம்?

போலீசுப் புலி புடிக்கும் மாப்பிள்ளே புர்ராவைப் பெயர்த்தெடுக்கும் அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா பெண்சாதி பேச்சைக் கேளு அப்பிடியாஆஹா

நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி ஊரு விட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமின்னு உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாக தோணுது

பட்டணம்தான் போக மாட்டேண்டி உன்னையும் பயணமாகச் சொல்ல மாட்டேண்டி நல்ல கட்டாணி முத்தே என் கண்ணைத் தொறந்தவ நீ தான் பொண்டாட்டி தாயே மாமாஏம்மா?

என்னைத் தனியா விடவே மாட்டேனுன்னு என் தலை மேலடிச்சி சத்தியம் பண்ணு எங்கப்பனானே சத்தியம் சத்தியம் சத்தியம்

ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்