Pattupola Ponnai |
|---|
பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம்
தொட்டுப் பாத்தா என்னைய்யா
கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப்
பட்டிக்காட்டுப் பொன்னைய்யா
அய்யா அய்யா பொன்னைய்யாஆஆஹா
பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம்
தொட்டுப் பாத்தா என்னைய்யா
கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப்
பட்டிக்காட்டுப் பொன்னைய்யா
அய்யா அய்யா பொன்னைய்யாஆஆஹா
உச்சி மேலே நின்றாலும்
உயர உயரச் சென்றாலும்
மெச்சிப் பேச மெத்தை போட
மேனகை போல் துணை வேண்டும்
பொன்னைய்யா
உச்சி மேலே நின்றாலும்
உயர உயரச் சென்றாலும்
மெச்சிப் பேச மெத்தை போட
மேனகை போல் துணை வேண்டும்
பொன்னைய்யா
சிரிப்பைப் பாத்து நாளாச்சு
உன் சேட்டையெல்லாம் என்னாச்சு
குறும்பு செய்யும் சின்னப்பொண்ணு
உனக்குத் தானே ஆளாச்சு
அய்யா அய்யா பொன்னைய்யாஆஆ
பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம்
தொட்டுப் பாத்தா என்னைய்யா
கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப்
பட்டிக்காட்டுப் பொன்னைய்யா
அய்யா அய்யா பொன்னைய்யா
அய்யா அய்யா
பத்து யானை பலமுண்டு
புத்தியுண்டு புகழுண்டு
சக்தி போல அழகு பொண்ணு
தாரமானால் சுகமுண்டுப் பாராய்யா
ஓடிப் போனாலும் விடமாட்டேன்
நீ ஒளிந்த போதும் விட மாட்டேன்
உள்ள மனசு சின்னஞ்சிறுசு
உரிமையின்றித் தொடமாட்டேன்
அய்யா அய்யா பொன்னைய்யாஆஆ
பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம்
தொட்டுப் பாத்தா என்னைய்யா
கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப்
பட்டிக்காட்டுப் பொன்னைய்யா
அய்யா அய்யா பொன்னைய்யா
ஆஹாஆஹாஆஹா
ஆளைப் பாத்தா சந்நியாசி
என்னை அளந்து பாத்தா சம்சாரி
நாளைப் பாத்து மாலைப் போட்டா
வாழப் வைப்பா மகராசி நானைய்யா
ஆளைப் பாத்தா சந்நியாசி
என்னை அளந்து பாத்தா சம்சாரி
நாளைப் பாத்து மாலைப் போட்டா
வாழப் வைப்பா மகராசி நானைய்யா
எந்த ஆடை போட்டாலும்
அது எனக்குப் பொருந்தும் பொன்னைய்யா
இஷ்டம் போலே போட்டுப் பாத்து
கட்டிப்பிடிச்சா என்னைய்யா
அய்யா அய்யா பொன்னைய்யாஆஆ
பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம்
தொட்டுப் பாத்தா என்னைய்யா
கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப்
பட்டிக்காட்டுப் பொன்னைய்யா
அய்யா அய்யா பொன்னைய்யாஆஆஆஅ
அய்யா அய்யா பொன்னைய்யா
ஆஹாஆஹாஆஹா
