Pesaathe

Pesaathe Song Lyrics In English


பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே

பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே
பேசாதே

நீ தந்த வாழ்கைக்கும்
நான் தந்த வார்த்தைக்கும்
இங்கே போராட்டமா

நீ தந்த வாழ்கைக்கும்
நான் தந்த வார்த்தைக்கும்
இங்கே போராட்டமா

நான் இங்கு தீபம்
உனக்கென்ன கோபம்
நான் இங்கு தீபம்
உனக்கென்ன கோபம்
புயல் என்ற காற்றில்
ஏற்றி வைத்தாய்

பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே
பேசாதே


கண்ணுக்குள் இமையெல்லாம்
முள்ளாகி வரும்போது
கண்ணை யார் காப்பது

கண்ணுக்குள் இமையெல்லாம்
முள்ளாகி வரும்போது
கண்ணை யார் காப்பது

என் தங்கை என்றேன்
என் தம்பி சென்றான்
என் தங்கை என்றேன்
என் தம்பி சென்றான்
கண்ணீரில் என்னை
ஆட்டி வைத்தான்

பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே
பேசாதே