Pethu Potta Annai

Pethu Potta Annai Song Lyrics In English


பெத்துப் போட்ட அன்னையும் உண்டு
பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு
இப்போது
இன்னும் பல சொந்தமும் உண்டு
கூட வர யாரிங்கு உண்டு
அப்போது

ஹோ மானிடா அழுவது ஏனடா
வாடி நிக்காதே இது வாடிக்கைதானே
ஆண்டவன் காட்டும் ஒரு வேடிக்கைதானே

பெத்துப் போட்ட அன்னையும் உண்டு
பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு
இப்போது

நாடகத்தில் எனக்கு
வேஷங்களைக் கொடுத்து
ஆடச் சொன்னான்டா
ஆட்டி வைத்தான்டா

வந்து விட்ட பிறகு
வாடி என்ன மனது
நூலில் நின்றாடும்
பொம்மை நானாகும்

உலகில் கிடையாது
இறவாத ஜீவன்
இருந்தால் அது இன்னும்
பிறவாத ஜீவன்

மெய் என்று மேனிக்கும்
பேர் வைத்தான்
மெய்யும் பொய்யாக
இந்த மெய்யும் பொய்யாக
ஆண்டவன் இடம்தான்
இது வாங்கிய கடன்தான்

பெத்துப் போட்ட அன்னையும் உண்டு
பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு
இப்போது


நம்முடைய கணக்கு
சாமி கையில் இருக்கு
கண்ணே கண்ணம்மா
பொன்னே பொன்னம்மா

வந்த வரை வரவு
சென்ற வரை செலவு
கண்ணே கண்ணம்மா
பொன்னே பொன்னம்மா

இனி நான் அழுதாலும்
சிரித்தாலும் ஒன்று
எதையும் சமமாக
நினைப்பேனே இன்று

தண்ணீரில் ஒட்டாத
எண்ணெய் நான்
கண்ணே கண்ணம்மா
அடி கண்ணே கண்ணம்மா
போதும் அம்மாடி
இங்கு உறவு கொண்டாடி

பெத்துப் போட்ட அன்னையும் உண்டு
பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு
இப்போது
இன்னும் பல சொந்தமும் உண்டு
கூட வர யாரிங்கு உண்டு
அப்போது

ஹோ மானிடா அழுவது ஏனடா
வாடி நிக்காதே இது வாடிக்கைதானே
ஆண்டவன் காட்டும் ஒரு வேடிக்கைதானே

பெத்துப் போட்ட அன்னையும் உண்டு
பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு
இப்போது