Pondatti Illaina

Pondatti Illaina Song Lyrics In English

பொண்டாட்டி இல்லேன்னா திண்டாட்டம் இத புரிஞ்சவன் வாழ்க்கை கொண்டாட்டம் அம்மாடி நீ ஒரு பூவாட்டம் உன்ன சுத்துறேனடி பொன் வண்டாட்டம்

ஏய் சுட்டெரிக்கும் வெய்யில் அடிச்சா மனம் நிழலுக்கு அலையுதம்மா ஹேய் சுடுதண்ணி ஊத்திக்கிட்டு சுத்தி வரும் வாழ்க்கையிலே உல்லாசம் தேவையம்மா

பொண்டாட்டி இல்லேன்னா திண்டாட்டம் இத புரிஞ்சவன் வாழ்க்கை கொண்டாட்டம் அம்மாடி நீ ஒரு பூவாட்டம் உன்ன சுத்துறேனடி பொன் வண்டாட்டம்

ஆண படைச்சவன் பெண்ண படைச்சான் ஏனம்மா அள்ளி அணச்சுக்கத்தான் வம்சம் தழைச்சுக்கத்தான் அன்பு இனியது என்று தெரிஞ்சுக்கத்தான்

ஹோய் அழகு மனைவியை கொஞ்சுறதெப்போ அறுவதிலா ஆசை மனசிருக்கு இளம் வயசிருக்கு அள்ளி அணைச்சுக்க என்ன தடை இருக்கு

என்னோடு தினம் நீ சேர்ந்தால் உனக்கென்னாளும் இனி சொர்க்கமே நீ கொடுத்த இந்த மாங்கல்யம் இது போதும் நான் உன் பக்கமே

தித்திக்கும் முத்தங்கள் கொடுத்து சேர்வதில் புத்தம் புது சுகமிருக்கு இந்த காதல் வாழ்க்கையில் இருப்பதினால்தான் குடும்பம் நிலைச்சிருக்கு

பொண்டாட்டி இல்லேன்னா திண்டாட்டம் இத புரிஞ்சவன் வாழ்க்கை கொண்டாட்டம் அம்மாடி நீ ஒரு பூவாட்டம் உன்ன சுத்துறேனடி பொன் வண்டாட்டம்

காதல் தேசத்தில் ஆட்சி பிடிப்பாள் பெண்தானே பெண் விழி அசைச்சா ஆண் மலை அசைப்பான் வங்கக் கடலையும் பிடிச்சி கொப்பளிப்பான்

ஹோய்காதல் இல்லையேல் தாலியும் மஞ்சளும் சுமைதானே பெண் அனுசரிச்சா அன்பை உணர வச்சா தன் உயிரையும் ஆண்கள் ஒப்படைப்பான்

சந்தோஷம் நல்ல சங்கீதம் உன் நெஞ்சில் சாயும் நாளிலே எப்போது ஒரு கண் உண்டு உன் மஞ்சள் பூசும் தோளிலே

ஒடம்பு மல்லிகை ஒடம்பு காமனே மெல்ல மெல்ல தொட்டு பழகு அடி தாலிக் கொண்டவன் தோளில் சாய்கையில் தினம் தினம் தேன் நிலவு