Ponnoonjal Aaduthu

Ponnoonjal Aaduthu Song Lyrics In English

பாடலாசிரியர் : வாலி

பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா பனியில் நனையும் பெண்ணிலா சங்கீதம் பாடுது தேன் நிலா தரையில் தவழும் வெண்ணிலா

மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா மன்னன் மடி தினம் கொஞ்சும் நிலா இந்த கண்ணான காதலன் கல்யாண நாயகன் முன்னாலும் பின்னாலும் முத்தாடும் மாலை நிலா

அழகான தேகம் முழுதாக பார்க்க தடை போடும் தங்க நிலா மணமாலை சூடும் மறுநாளில் இங்கு கடை போடும் மங்கை நிலா

செந்தேனும் பாலும்ம்ம்ம் செவ்வாயில் ஊறும்ம்ம்ம் ஓயாமல் நீயும் பரிமாறும் நேரம் ஒரு பாதி பசியாறி அலைபாயும் ஆசை நிலா

பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா பனியில் நனையும் பெண்ணிலா சங்கீதம் பாடுது தேன் நிலா தரையில் தவழும் வெண்ணிலா

பாய் போட்டு ஆடும் விளையாட்டு என்ன புரியாத பிள்ளை நிலா இரவான பின்பு எனை தேடி மெல்ல வரவேண்டும் வெள்ளை நிலா

சிங்கார லீலை கொண்டாடும் வேளை நீதானே எந்தன் இடை சூடும் சேலை ஒரு போதும் பிரியாத வரம் கேட்கும் வஞ்சி நிலா