Poongaatre Inge

Poongaatre Inge Song Lyrics In English


பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்துபூ போன்ற பிள்ளை முகம் பார்த்துபாராட்டி சொல்லு ஒரு பாட்டுபால் போன்ற வெள்ளை மனம் பார்த்துயார் சொல்லுவது இங்கு தாய் இல்லையெனநான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையெனஎன்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க

பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்துபூ போன்ற பிள்ளை முகம் பார்த்து

காவிரி போலே கங்கை போலே உன் பேரும் உன் சீரும்பொங்கிட வேண்டும் தேசம் உன்னை பேசிட வேண்டும்

உந்தன் அண்ணனை போலே மண்ணின் மேலே ஊரார்கள் பாராட்ட வாழ்ந்திட வேண்டும் அன்னை மனம் வாழ்த்திட வேண்டும்

சின்ன சின்ன வார்த்தை ஒன்று ரெண்டு பேசும்தம்பி உந்தன் வாழ்வில் தென்றல் வந்து வீசும்

காலம் உன் வசமே என பாடும் என் மனமேநாளும் என் அருகில் மனம் வீசும் சந்தனமேஎன்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க

அனைவரும் : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்துபூ போன்ற பிள்ளை முகம் பார்த்து

என்னிடம் உன்னை தந்தாள் அன்னை கண்மூடி சென்றாளே சென்றவள் அன்று சொன்ன சொல்லும் நெஞ்சினில் உண்டு


எந்தன் கண்களில் பார்வை வந்தால்முதல் பார்வையிலேஅய்யா உன் பொன் முகம் பார்ப்பேன் பின்பு எந்தன் மன்னனை பார்ப்பேன்

அண்ணன் அண்ணி போலே தெய்வம் உண்டோ கூறுஉன்னை எண்ணி நாளும் வாழும் உள்ளம் பாரு

பொன்னே பொன்மணியே எங்கள் கண்ணே கண்மணியேபேசும் சித்திரமே ஒளி வீசும் ரத்தினமேஎன்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க

அனைவரும் : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்துபூ போன்ற பிள்ளை முகம் பார்த்துபாராட்டி சொல்லு ஒரு பாட்டுபால் போன்ற வெள்ளை மனம் பார்த்து

யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென

நான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென

அனைவரும் : என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்கபூங்காற்றே இங்கே வந்து வாழ்த்துபூ போன்ற பிள்ளை முகம் பார்த்துபாராட்டி சொல்லு ஒரு பாட்டுபால் போன்ற வெள்ளை மனம் பார்த்து