Pottalum Yerala En Puthi

Pottalum Yerala En Puthi Song Lyrics In English


போட்டாலும் ஏறல ஹெ என் புத்தி மாறல என்னான்னு தோணல என்ன சொல்ல போட்டாலும் ஏறல என் புத்தி மாறல என்னான்னு தோணல என்ன சொல்ல

உன்னாலே போனேன் மோசம் எல்லாமே வேஷம் வேஷம் என்னாச்சு பாசம் நேசம் சொன்னால வார்த்தையும் கூசும் போட்டாலும் ஏறல என் புத்தி மாறல என்னான்னு தோணல ஹ என்ன சொல்ல

தாயோடு பாசம் என்ன அறியாம வாழ்ந்தேனே தனிக்காட்டு ராஜா போல நான் மேலே இருந்தேனே அன்பான பார்வையை பார்த்து அணைச்சாளே மனசோட பெண்ணோட காதலினால ஹ நான் வந்தேன் தெருவோட

தாளாத துக்கத்திலே எப்போதும் தூக்கமில்ல தாங்காம தள்ளாடி நான் இருந்த வேல போட்டாலும் ஏறல என் புத்தி மாறல என்னான்னு தோணல என்ன சொல்ல

உன்னாலே போனேன் மோசம் எல்லாமே வேஷம் வேஷம் என்னாச்சு பாசம் நேசம் சொன்னால வார்த்தையும் கூசும்

போட்டாலும் ஏறல என் புத்தி மாறல என்னான்னு தோணல ஹ என்ன சொல்ல என்ன சொல்ல


தாலாட்டு பாட்டுச் சத்தம் என் காதில் கேட்டதில்லை தாயென்ன தொட்டுத் தொட்டு பால் கூட ஊட்டவில்ல இல்லாத சொந்தம் பந்தம் எல்லாம கொண்டு வந்தா பொல்லாத காளை நெஞ்ச புண்ணாக ஆக்கிப்புட்டா

சொன்னாலும் ஆறவில்ல என் பாதை வேறயில்ல கண்ணாடி புட்டி ஒண்ணு கை வந்த வேளை போட்டாலும் ஏறல என் புத்தி மாறல என்னான்னு தோணல என்ன சொல்ல

உன்னாலே போனேன் மோசம் எல்லாமே வேஷம் வேஷம் என்னாச்சு பாசம் நேசம் சொன்னால வார்த்தையும் கூசும்

போட்டாலும் ஏறல என் புத்தி மாறல என்னான்னு தோணல ஹ என்ன சொல்ல என்ன சொல்ல