Pudhiya Paravai Paranthathe

Pudhiya Paravai Paranthathe Song Lyrics In English

புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ நிலவு நீந்தும் வேளையில் உறவைத் தேடி பாடுதோ

உன்னைத்தான் உன்னைத்தான் அழைத்தாளோ சொல்லத்தான் சொல்லத்தான் தவித்தாளோ

புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ இதய வாசல் தேடுதோ

காலடி சத்தம் தந்ததே நெஞ்சினில் முத்தம் கொற்கையின் முத்து கொஞ்சுதே கிண்கிணி கொத்து

தேவதை என்று பாராட்ட சிந்தமிழ் சங்கம் கூடியதோ காதலன் பேரை தாலாட்ட காவடிசிந்து பாடியதோ

உன்னைத்தான் அழைத்தாள் சொல்லத்தான் தவித்தாள் தவித்தாளோ

புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ இதய வாசல் தேடுதோ

வைகையின் ஓரம் மன்னவா நீ வரும் நேரம் என்ன உன் கண்கள் நொந்ததே பங்குனி திங்கள்

ஜென்மங்கள் ஏழும் போதாது தேவனின் மார்பில் பூ தொடுக்க தேகமும் ஒன்று போதாது தேவனின் கைகள் தேன் எடுக்க