Rasigane En Aruginil Vaa

Rasigane En Aruginil Vaa Song Lyrics In English


ஒன்டுத்ரிஃபோர்

ரசிகனே
ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ரசிக்க வா எந்தன் மெல்லிசை
அருகிலே உன் அணைப்பிலே
இருக்க வேண்டும் நான் தினம் தினம்

ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா

இதயமே நீ ஒரு மலர்
உள்ளூரா என்னென்ன வாசம்

இனிமைகள் உன் நகைப்பிலே
இளமைகள் உன் அணைப்பிலே

காணாத ஆனந்தம்
ஊற்றாக ஆரம்பம்
காலம் யாவும் இன்பம் இன்பம்

ரசிகனே என் அருகில் வா

ஸ்வரங்களில் ஒரு அதிசயம்
சொன்னாலும் கேட்டாலும் இன்பம்


அலையிலும் ஒரு சுதி வரும்
அசைவிலும் ஒரு ஜதி வரும்

ஆரோடும் நீரோட்டம்
அங்கேயும் ஓர் ராகம்
கேட்கும் யாவும் நாதம் கீதம்

ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா



தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்
நான் காணும் உள்ளங்கள்
நல் வாழ்த்து சொல்லுங்கள்
நாளும் நாளும் இன்பம் இன்பம்

இருவர் : ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ரசிக்க வா எந்தன் மெல்லிசை
அருகிலே உன் அணைப்பிலே
இருக்க வேண்டும் நான் தினம் தினம்
ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா