Raththatha Pangu Vechu |
---|
ரத்தத்தப் பங்கு வெச்சு
உங்களுக்கு பொறப்பு வந்ததடா
ரத்தத்தப் பங்கு வெச்சு
உங்களுக்கு பொறப்பு வந்ததடா
சொத்தையும் பங்கு வச்சு
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா
சொத்தையும் பங்கு வச்சு
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா
நேத்து வர ஒத்துமையா
வாழ்ந்திருந்த சொந்தமடா
யாரு கண்ணு பட்டதுவோ
ஊரு கூட சொல்லுதடா
விதியா தட்டுக் கெட்ட மதியா
வினையா மத்தவங்க சதியா
ரத்தத்தப் பங்கு வெச்சு
உங்களுக்கு பொறப்பு வந்ததடா
சொத்தையும் பங்கு வச்சு
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
அம்மா மண்ணில் சாய்ந்ததம்மா
வாழ வெச்ச வாழ மரம்
சொன்னா சொல்லு தாங்கிடுமா
ரோசம் உள்ள தாயின் மனம்
பிள்ளைகள் பெத்தா நெல் மணிக் கொத்தா
பெத்ததில் என்ன புண்ணியம் கண்டா
பந்தமும் பாசமும் என்னாச்சு
பெத்தவ சந்தியில் நின்னாச்சு
பாடுகள் ஆயிரம் பட்டாச்சு
பேச்சையும் மூச்சையும் விட்டாச்சு
அம்மான்னு அம்மான்னு
சொன்னது எல்லாம் சும்மாவா
ரத்தத்தப் பங்கு வெச்சு
உங்களுக்கு பொறப்பு வந்ததடா
சொத்தையும் பங்கு வச்சு
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
பெத்தா இவ மூணு புள்ள
ஒண்ணுக்கொண்ணு சேரவில்ல
ஒண்ணா இப்ப சேந்திருக்கு
பெத்தவள தூக்கயிலே
தள்ளியே வெச்சு வெந்தது பாதி
கொள்ளியே வெச்சு வேகணும் மீதி
தொட்டிலில் போட்டவ தாலாட்டி
தோள்களில் வைத்தவ சீராட்டி
ஒவ்வொரு வேளையும் சோறூட்டி
உங்கள தாங்கிய மூதாட்டி
புண்ணான நெஞ்சோடு
பூமிய விட்டு போறாளே
ரத்தத்தப் பங்கு வெச்சு
உங்களுக்கு பொறப்பு வந்ததடா
சொத்தையும் பங்கு வச்சு
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா