Roja Kadale

Roja Kadale Song Lyrics In English


ரோஜாக் கடலே
என் ராஜா மகளே என்
ஆசைக் கனியே வா தனியே
காதல் துணையே என்
கண்ணின் மணியே என்
இன்னோா் உயிரே வா அருகே

பூக்களின் பிள்ளாய்
புன்னகைக் கிள்ளாய்
பொன்னில் வாா்த்தது மேனி

பூச்செடி என்மேல்
காற்றடித்தாலும் உன்
நெஞ்சில் தைக்குமோ ஆணி

வா வா அலைகடல்
சிறுதுளி வா வா பெண்ணே
வா வா எாிமலை சிறு
பொறி வா வா

வா வா அலைகடல்
சிறுதுளி வா வா பெண்ணே
வா வா எாிமலை சிறு
பொறி வா வா

உளி கொண்டு
எய்தாலும் ஒளி என்றும்
தேயாது அதுபோல் நம்காதல் மானே

ரோஜாக் கடலே
என் ராஜா மகளே என்
ஆசைக் கனியே வா தனியே

காதல் துணையே என்
கண்ணின் மணியே என்
இன்னோா் உயிரே வா அருகே

செவ்வாய்க் குயிலே
பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே
வா வெளியே

நீா் வாழ் குழலே
கண் நோ் காண் எழிலே
என் மாா்மேல் மயிலே
வா வெளியே

ஆட் படை கொண்டு
தாக்கிய போதும் வானம்
வளைவதும் இல்லை
நாற் படைக் கண்டு ஆா்பாித்தாலும்
வேட்கை அழிவதும் இல்லை

போவோம் நிலம்
விட்டு நிலவுக்கு போவோம்
இனி வாழ்வோம் உயிருக்கு
உயிா் தந்து வாழ்வோம்

கண்டங்கள் பிண்டாலும்
அண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா


செவ்வாய்க் குயிலே
பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே
வா வெளியே

நீா் வாழ் குழலே
கண் நோ் காண் எழிலே
என் மாா்மேல் மயிலே
வா வெளியே

தேனே தேனே தேனே
தேனே தேனே தேனே தேனே
தேனே வா வா தேனே
மானே மானே மானே மானே
மானே மானே மானே மானே
எந்தன் மானே

பருவச்சிட்டே
பவள திட்டே இதழைத்
தந்தால் எதையும் தருவேன்

புகழும் அய்யா
புழுகுப்பையா சிறு போா்
வந்தால் என்னை மறப்பாய்

வில்லும் அம்பும்
சோ்ந்தாலும் சோ்ந்தே
வாழ்வதும் இல்லை

சொல்லும் பொருளும்
ஆனோமே என்றும் பிாிவே இல்லை

வா வா அலைகடல்
சிறுதுளி வா வா பெண்ணே
வா வா எாிமலை சிறு
பொறி வா வா

வா வா அலைகடல்
சிறுதுளி வா வா பெண்ணே
வா வா எாிமலை சிறு
பொறி வா வா

கண்டங்கள் பிண்டாலும்
அண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா

தேனே தேனே தேனே
தேனே தேனே தேனே தேனே
தேனே வா வா தேனே
மானே மானே மானே மானே
மானே மானே மானே மானே
எந்தன் மானே