Saanjadu Saanjadu

Saanjadu Saanjadu Song Lyrics In English


சாஞ்சாடு சாஞ்சாடு
சாஞ்சாடு கண்ணே
தோளோடு தோள் சேர்த்து
சாஞ்சாடு கண்ணே

உதிரம் நிறம் மாற்றி
பாலாக்கினாளோ
அன்னை அவள் மார்பில்
உயிரூட்டினாளோ
ஆரீராரி ராராரோ
ஆரீராரி ராராரோ

சாஞ்சாடு சாஞ்சாடு
சாஞ்சாடு கண்ணே
தோளோடு தோள் சேர்த்து
சாஞ்சாடு கண்ணே

கருவில் நம்மை தாங்க
வரம் கேட்கிறாள்
தான் தாயாகவே
அவள் தவம் செய்கிறாள்

மரணம் அதை பார்த்து
சேய் காண்கிறாள்
மண்ணில் இரண்டாம் முறை
நம் தாய் பிறக்கிறாள்

பிள்ளை கொஞ்சி
விளையாடவே
பொம்மை வடிவில்
அவள் மாறினாள்
இமை மேலே இமயம்
நமக்காக சுமந்தாள்
ஆரிராரோ ஆராரோ

சாஞ்சாடு சாஞ்சாடு
சாஞ்சாடு கண்ணே
தோளோடு தோள் சேர்த்து
சாஞ்சாடு கண்ணே


தாயின் இரு பிள்ளை
இரு கண்களே
ஒன்று வலித்தாலுமே
அவள் மனம் வாடுமே

உண்மை புரியாத
ஒரு பிள்ளையே
தன் அறியாமையால்
தினம் தடுமாறுமே

தாயின் அன்பு
பொய்யாகுமா
தாய் பால் என்றும் விஷமாகுமா
சுகமான உலகம் கருவறை ஆகும்
ஆரிராரோ ஆராரோ

சாஞ்சாடு சாஞ்சாடு
சாஞ்சாடு கண்ணே
தோளோடு தோள் சேர்த்து
சாஞ்சாடு கண்ணே

உதிரம் நிறம் மாற்றி
பாலாக்கினாளோ
அன்னை அவள் மார்பில்
உயிரூட்டினாளோ
ஆரீராரி ராராரோ
ஆரீராரி ராராரோ
ஹா ம்ம்ம்
ம்ம்ம்ம்