Sangathamizho

Sangathamizho Song Lyrics In English

ஆஆஆஆஅஆ ஆஆஆஆஅஆ

சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ பால் பொங்கும் பூந்தேகம் மேலாடையும் கீழாடையும் மூட காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ

சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ

ஆஆஆஆஅஆ ஆஆஆஆஅஆ லலலா லலலா லாலலால லலலா

உன் கார்க்கூந்தல் நீர்க் கொண்ட மேகம் உன் கண் வண்ணம் செம்மீன்கள் ஆகும் நீ செவ்வாழைக் கால் கொண்டு ஆட என் சிந்தை உன் பின்னோடு ஓட

இள நெஞ்சை வலை வீசி பிடித்தாயோ ஆஆஆ விழியோரக் கவிதை நீ படித்தாயோ ஆஆஆ ஆகாயம் நானாக பூபாளம் நீதானோ

சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ பால் பொங்கும் பூந்தேகம் மேலாடையும் கீழாடையும் மூட காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ

சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ

நீ தெய்வீக எழில் கொஞ்சும் மாது விண் திரை மீது நீ தோன்றும்போது நான் பாராட்ட மொழி ஒன்று ஏது என் பார்வைகள் சொல்லாதோ தூது

எதிர் நின்று சதிராடும் மலர்த்தோட்டம் ஆஆஆ இடை மீது குலுங்காதோ கனிக் கூட்டம் ஆஆஆ நீதானே நாள்தோறும் நான் பாடும் ஸ்ரீராகம்