Sangeetham En Thegam

Sangeetham En Thegam Song Lyrics In English


சங்கீதம் என் தேகம் அன்றோ சங்கீதம் என் தேகம் அன்றோ சுக நாதங்கள் கொஞ்சும் சிறு பாதங்கள் கெஞ்சும் சுக நாதங்கள் கொஞ்சும் சிறு பாதங்கள் கெஞ்சும் ஆலிலை மேல் ஒரு நூலிடை மேகலை ஆட இசை ஏழாக யாழாக மீட்டும்போது

சங்கீதம் என் தேகம் அன்றோ

ஆகாய கங்கைக்கும் தீராத தாகம் ஆஆ ஆகாய கங்கைக்கும் தீராத தாகம் நான் சென்று நீராட தானாக தீரும் பூங்காற்றும் தீண்டாமல் பெருமூச்சு வாங்கும் பொன்மேனி தழுவாமல் அது எங்கு தூங்கும்

இவள் செம்பவளம் அதில் கம்பரசம் இவள் சாதனைகள் சுக வேதனைகள் அமுத மழையில் நனைந்து விளைந்த கொடி நான் அமர கவிதை நயமும் லயமும் வழங்கிடும்

சங்கீதம் சங்கீதம் சங்கீதம் என் தேகம் அன்றோ


ஜாதி மல்லி பூப்போலே அந்தி மாலை பூப்பவள் ஜாதி மல்லி பூப்போலே அந்தி மாலை பூப்பவள் வாழைப்பூவில் தேனை தந்து மோகதாகம் தீர்ப்பவள் வாழைப்பூவில் தேனை தந்து மோகதாகம் தீர்ப்பவள் சதி வாணவர்களும் புவி வேந்தர்களும் மன ஆசையிலே விழி வாசலிலே

தினம் ஏங்கிடுவார் எனை அடி பணிவார் இது பொய்யுரையோ வெறும் புகழுரையோ இவள் இனிய இளமை ஒரு அழகின் உவமை சிறு இடையும் நடையும் இயலும் இசையும் என வரும்

சங்கீதம் சங்கீதம் சங்கீதம் என் தேகம் அன்றோ சுக நாதங்கள் கொஞ்சும் சிறு பாதங்கள் கெஞ்சும் சுக நாதங்கள் கொஞ்சும் சிறு பாதங்கள் கெஞ்சும் ஆலிலை மேல் ஒரு நூலிடை மேகலை ஆட இசை ஏழாக யாழாக மீட்டும்போது

சங்கீதம் என் தேகம் அன்றோ