Sembaruthi Poovin Singaram

Sembaruthi Poovin Singaram Song Lyrics In English


பாடகர்கள்  : எஸ் பி பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ் ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஹு ஹாஹு ஹா

செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு சிலிர்க்குது எனக்கு அது எதுக்கு அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு துடிக்குது எனக்கு அது எதுக்கு

வாம்மா வா வளையல் போட்டு வீராப்ப எனக்கு காட்டு ஆஹா ஹூஹூ

செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு சிலிர்க்குது எனக்கு அது எதுக்கு அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு துடிக்குது எனக்கு அது எதுக்கு

ஹாஹூ ஹாஹு ஹா ஹு ஹா ஹு ஹா ஹா ஹா அஹ

ஆஹா ஹா ஒன்னப் பாத்த நேரம்தான் துள்ளுதடி உள்ளம் தான் ஏய் சின்னப்பொண்ணு தேகந்தான் நெருங்குமோ என் பக்கம் தான்

அஞ்சுறவ நான் இல்ல ஆளட்டுமா அந்தப்புரம் வா ஒரு ஓரமா அன்னக்கிளி நான் இல்ல காட்டுப்புலி ஹோய் சொல்லப்போனா நான் ஒரு ப்ரூஸ் லீ

மாமந்தானே பந்தாடும் பீமன்தானே பொல்லாத சுட்டிப்பொண்ணே செல்லக்கண்ணே கட்டிப்போடும் கெட்டிக்காரந்தான் ஹாஹூ


செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு சிலிர்த்தது எதுக்கு அது அடக்கு அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு துடித்தது எதுக்கு என்ன மடக்கு

வாய்யா வா நடையை போட்டு வீராப்ப எனக்கு காட்டு ஹா ஹுஹா

கையக்காலை ஓதறாதே கண்டபடி துள்ளாதே யோவ் எங்கிட்ட நீ வாங்காதே

ஆஹா கில்லாடி தான் தூங்காதே

என்னை விட நீ என்ன போக்கிரியா ஹ முட்ட இட நான் பெட்டகோழியா சங்கதிய நீ இப்போ பாக்குறியா சம்மதிச்சா வா சரி ஜோடியா

ஆட்டம் போடா நீ யாராச்சும் ஆளப்பாரு எங்கிட்ட குத்துப்பட்டா அம்மம்மா மொத்தத்துல புத்தி விளங்கும் ஹா ஹூ

செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு சிலிர்த்தது எனக்கு அது எதுக்கு அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு துடித்தது எதுக்கு என்ன மடக்கு

வாம்மா வா வளையல் போட்டு வீராப்ப எனக்கு காட்டு ஹா ஹு ஹாஹா

செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு சிலிர்த்தது எனக்கு அது எதுக்கு அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு துடித்தது எதுக்கு என்ன மடக்கு