Sirithu Sirithu Sivakka

Sirithu Sirithu Sivakka Song Lyrics In English


சிரித்து சிரித்து சிவக்க வேண்டும் கன்னம் இதை தெரிந்தும் உனக்கு நாணம் ஏனோ இன்னும் இதை தெரிந்தும் உனக்கு நாணம் ஏனோ இன்னும் நாம் இருவர் மட்டும் தனித்திருக்கும் சமயம் நாம் இருவர் மட்டும் தனித்திருக்கும் சமயம் அது இன்பத்து எதிரியாக அமையும் கண்ணே சிரித்து சிரித்து சிவக்க வேண்டும் கன்னம்

பிறந்த போதே கூட பிறந்த நாணம் பிறந்த போதே கூட பிறந்த நாணம் இயற்கை பெண்களுக்கு வழங்கிய சன்மானம் இயற்கை பெண்களுக்கு வழங்கிய சன்மானம் இதை மறந்து வாழும் பெண்ணுக்கேது மானம் இதை மறந்து வாழும் பெண்ணுக்கேது மானம் அவள் வாழ்வினிலே வந்து சேரும் தீராத அவமானம்

பிறந்த போதே கூட பிறந்த நாணம் இயற்கை பெண்களுக்கு வழங்கிய சன்மானம் இது பிறந்த போதே கூட பிறந்த நாணம்

இனிக்க இனிக்க பேச வேண்டும் கனிமொழியே காதல் கனிவை அள்ளி வீச வேண்டும் கண் வழியே இனிக்க இனிக்க பேச வேண்டும் கனிமொழியே காதல் கனிவை அள்ளி வீச வேண்டும் கண் வழியே

அடக்கம் என்றும் தமிழ் மகளின் அணிகலமே அடக்கம் என்றும் தமிழ் மகளின் அணிகலமே இதை அறிந்தும் குறும்பு பேச்சுகளேன் என்னிடமே இதை அறிந்தும் குறும்பு பேச்சுகளேன் என்னிடமே

பிறந்த போதே கூட பிறந்த நாணம் இயற்கை பெண்களுக்கு வழங்கிய சன்மானம் இது பிறந்த போதே கூட பிறந்த நாணம்


நிலத்தில் பெய்து கலந்த வானமழையும் தன்னாலே அந்த நிலத்தின் தன்மையோடு இணைந்து போவதுபோலே நிலத்தில் பெய்து கலந்த வானமழையும் தன்னாலே அந்த நிலத்தின் தன்மையோடு இணைந்து போவதுபோலே

வளரும் அன்பில் நமது உள்ளம் இணைந்ததனாலே வளரும் அன்பில் நமது உள்ளம் இணைந்ததனாலே

வாழ்வில் நீயும் நானும் ஒன்றாய் ஆனதினாலே வாழ்வில் நீயும் நானும் ஒன்றாய் ஆனதினாலே

சிரித்து சிரித்து சிவக்க வேண்டும் கன்னம் (2) ஆஆஆ