Siruvani

Siruvani Song Lyrics In English


சிறுவாணி தண்ணி குடிச்சு
நான் பவானியில் குளிச்சி வளந்தவ

தாமிரபரணி தண்ணி குடிச்சி
நானும் வைகையில் குளிச்சி வளந்தவ

காவேரியில் நான் குளிச்சேன்
பாலாத்துல நீந்தி வந்தேன்
யாரா இருந்தாலும்
செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி
சென்னையில் வளரவேணும்

ஆண் மற்றும்
செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி
சென்னையில் வளரவேணும்

சிறுவாணி தண்ணி குடிச்சு
நான் பவானியில் குளிச்சி வளந்தவ

வைகை தண்ணி
குடிச்ச பொண்ணு
வைகறையில் எழுந்திடுவா
வாசப்பெருக்கி கோலம் போட்டு
சாமியத்தான் கும்பிடுவா

சிறுவாணி தண்ணி குடிச்சா
சீக்கிரமா எழும்ப மாட்டா
சூரியனும் வந்தாக்கூட
திரும்பி அவ பாக்கமாட்டா

சண்டித்தனம் பண்ணும்
பப பபம் பபபம்
வண்டிமாடு போல
பப பபம் பபபம்
கொண்டையில
குளுக்கு சண்டை இங்கு எதுக்கு
சக்களத்திதான் சண்டை
போடுவா நமக்கெதுக்கு

சிறுவாணி தண்ணி குடிச்சு
நான் பவானியில் குளிச்சி வளந்தவ ஹே

தாமிரபரணி தண்ணி குடிச்சி
நானும் வைகையில் குளிச்சி வளந்தவ ஹே

தண்ணியிலே பேதமில்லை
அதுக்கு நிறம் ஏதுமில்லை
சேருகின்ற நிலத்தைப் போல
மாறும் அந்த நிறமும் இங்கே
எவ்வளவு தண்ணியத்தான்
அள்ளி அள்ளி குடிச்சு
பார்த்தும் அந்த குணம் வரவுமில்லை
ஆண்டவனும் கொடுக்கவில்லை


கண்ணிருந்து குருடா
ரம்பம் பபம்பம்
நடந்திடும் மனிதா
ரம்பம் பபம்பம்

கண்ணிருந்து குருடா
நடந்திடும் மனிதா
மண்ணு மேலதான்
நீயிருக்கணும் புரிஞ்சிக்கடா

சிறுவாணி தண்ணி குடிச்சு
நான் பவானியில் குளிச்சி வளந்தவஹே

தாமிரபரணி தண்ணி குடிச்சி
நானும் வைகையில குளிச்சி வளந்தவஹே

ஹே ஹே காவேரியில்
நான் குளிச்சேன்
பாலாத்துல நீந்தி வந்தேன்
யாரா இருந்தாலும்
செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி
சென்னையில் வளரவேணும்

ஆமா

பெண் செம்பரபாக்கம் தண்ணி
குடிச்சி சென்னையில் வளரவேணும்

டுர்ர்ர்டுர்ர்டுர்ர்ர்ர்

ஆண் மற்றும்
செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி
சென்னையில் வளரவேணும்
ஏஹேசெம்பரபாக்கம் தண்ணி குடிச்சி
சென்னையில் வளரவேணும்
தம் தம்தம்