Sofia

Sofia Song Lyrics In English


யாவரும் கேளா என் பாடல் ஒன்றை நீமட்டும் கேட்கிறாய் தனிமைதான் என் துணை என்று வாழ்ந்தேன் எல்லாமே நீயாகிறாய்

உடைந்தே கிடந்தேன் சோஃபியா ஆயிரம் துண்டென அணைத்தே இணைத்தாய் சோஃபியா ஆகினேன் ஒன்றென

சுடாமலே தீண்டிய தீபோலே காதல் பேசுகிறாய் இருளின் கடைசி துளிகள் காய எரிகின்றாய்

சுடாமலே தீண்டிய தீபோலே காதல் பேசுகிறாய் இருளின் கடைசி துளிகள் காய எரிகின்றாய் வேகமாய்

உன் மௌனத்திலே சோஃபியா தாய்மொழி கேட்கிறேன் உன் கண்களினால் சோஃபியா உண்மையாய் ஆகிறேன்

அழகால் உயிரைத் தொடுவாள் சிரிப்பால் என்னைப் பந்தாடுவாள் இனிமை இமையால் மனதுள் வீசுவாள் இசையின் சாரல் அமுதாய் மாற்றுவாள் தினம் நெஞ்சிலே மலராய் மலர்வாள்


விரல்கள் கோர்க்கையில் சோஃபியா பூமியே கையிலே இதழ்கள் கோர்க்கையில் சோஃபியா வானமே நாவிலே

சுடாமலே தீண்டிய தீபோலே காதல் பேசுகிறாய் இருளின் கடைசி துளிகள் காய எரிகின்றாய் வேகமாய்

சோஃபியா சோஃபியா சோஃபியா [8]

சுடாமலே தீண்டிய தீபோலே காதல் பேசுகிறாய் இருளின் கடைசி துளிகள் காய எரிகின்றாய்

உடைந்தே கிடந்தேன் சோஃபியா ஆயிரம் துண்டென அணைத்தே இணைத்தாய் சோஃபியா ஆகினேன் ஒன்றென