Sudasuda Thooral

Sudasuda Thooral Song Lyrics In English


விஷ்லிங் :

சுடச்சுட தூரல்
பொழிவது நீதான்
தொட தொட தீயாய்
குளிர்வதும் நீதான்

எதிர்பாராத
பூகம்பம் நீயேதான்
ஓஹோ என்னை
நான் காணும் ஆரம்பம்
நீயே தான்

முன்னிருப்பதும்
நீதான் பின்னிருப்பதும்
நீதான் என்ன சொல்வது
எந்தன் நெஞ்சிலே
உள்ளிருப்பது நீ தான்

சிக்கவைப்பதும்
நீதான் சிக்கெடுப்பதும்
நீதான் என்ன செய்வது
என்னை இப்படி கத்த
வைப்பதும் நீதான் நீதான்

என்னிடம்
உள்ள கெட்டதை நீ
விலக்கி நல்லதையே
கொடுத்தாய் தேவதையே

நானே என்னை
துறந்தேன் அடி நீயே
உண்மை உணர்ந்தேன்
அடி


என்ன
நினைத்தாலும் சொல்லி
விடுவேனே இப்பொழுது
ஏனடி தயங்குகிறேன்
சொல்லெல்லாம் நீயாகி
போனாயே

அன்னையிடம்
கூட இப்படி ஓர் பாசம்
கண்டதில்லை நான் என
புரிகிறதே வாழ்வெல்லாம்
நீ என்று ஆனாயே

எப்பவும் உன்னை
எண்ணியே கண் உறங்கி
எத்தனையோ தினங்கள்
ஆகியதே பூவே உன் முன்
இருந்தேன் அடி ஆனால்
இன்றே வாழ்ந்தேன் அடி

உன்னை ஒரு
பாதி என்று நினைக்காமல்
அத்தனையும் நீயென
நினைப்பதிலே நாளெல்லாம்
தீர்ந்தாலே சந்தோஷம்

தொல்லை என
நீயும் என்னை நினைத்தாலே
நிம்மதியை நீ பெற துணை
புரிந்து சாவை நான் சேர்ந்தாலும்
சந்தோஷம்

விஷ்லிங் :