Swasamae – O2 Film

Swasamae – O2 Film Song Lyrics In English


பாடகி  :பிருந்தா சிவகுமார்

இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் மற்றும் ராஜேஷ் கிரி பிரசாத்

எனது கருவில் பூத்த ஓர் இளைய நிலவு நீ எனது விழியில் வாழும் எதிர்கால கனவு நீ

உலகிலே எதுவுமே முழுமை இல்லையே விழிகளின் நிறங்களோ கருப்பு வெள்ளையே

புயல் காற்றாய் ஒரு தேடல் இன்று தென்றல் ஆனதே


பெண் சுவாசமே சுவாசமே தேடல் இன்று முடிந்ததே விடியலை சேர்ந்து நாமும் காணவே சுவாசமே சுவாசமே உயிரை தீண்டும் சுவாசமே உனக்கினி வீசும் காற்றில் பிறக்குமே

அழகின் வடிவம் நீ எந்தன் உயிரின் உருவம் நீ என் இதழின் ஓரம் மலரும் சிரிப்பு நீ

வளரும் கவிதை நீ எந்தன் வாழ்வின் பொருளும் நீ கண் உறங்கும் பொழுதில் மலரும் கனவு நீ

இந்த உறவை போல உலகில் வேறு உறவு இல்லயே உயர பறக்கும் பறவை நமக்கும் எல்லை இல்லயே உன்னை ஈன்ற பொழுதை மீண்டும் உணர போகிறேன்

பெண் சுவாசமே சுவாசமே தேடல் இன்று முடிந்ததே விடியலை சேர்ந்து நாமும் காணவே சுவாசமே சுவாசமே உயிரை தீண்டும் சுவாசமே உனக்கினி வீசும் காற்றில் பிறக்குமே