Thangame Ingu Vaa

Thangame Ingu Vaa Song Lyrics In English


தங்கமே இங்கு வா கனவா நிஜம்தானா காதல் வந்தால் பேதமில்லையே ஜாதி இல்லை ஜாதி முல்லையே

இளமை இளமை துளிர் விட்டது இன்றுதான் இன்றுதான் குளிர் விட்டது பருவம் பருவம் தொட்டவுடன் தேன் சொட்டுது

காதல் வந்தால் பேதமில்லையே ஜாதி இல்லை ஜாதி முல்லையே

கரும்பே நீ கறுப்பு அடியேன் கொஞ்சம் சிவப்பு இரண்டும் கலந்தால் இதுவே சிறப்பு அடடா நல்ல விளக்கம் அதுதான் உங்கள் வழக்கம் உங்கள் தமிழ் கேட்டால் இரும்பும் பழுக்கும்

கங்கையில் விழுந்தால் கரையில் எழுவேன் மங்கை மேல் விழுந்தால் எங்கு நான் எழுவேன் உண்மையில் நீங்கள் கம்பன்தான் இடம் கொடுத்தால் ரொம்ப வம்புதான்


தங்கமே இங்கு வா கனவா நிஜம்தானா ஏழைக் கிளி இங்கே வந்தது ஜோடிக் கிளி சொந்தம் கொண்டது

ஊருக்குள் இது புகையும் அதனால் வரும் பகையும் தினையை விதைத்தால் தினைதான் விளையும் இலைகள் விழும் வரைக்கும் நாய்கள் கொஞ்சம் குறைக்கும் பந்திகள் முடிந்தால் வாலை குழைக்கும்

கழுத்தை தருவேன் கட்டளை இடுங்கள் கட்டிலை செய்த பின் தொட்டிலை செய்யுங்கள் குழந்தை நிறம் கறுப்பா இல்லை சிவப்பா பதில் சொல்லம்மா

தங்கமேஇங்கு வா கனவாநிஜம்தானா இருவர் : காதல் வந்தால் பேதமில்லையே ஜாதி இல்லை ஜாதி முல்லையே காதல் வந்தால் பேதமில்லையே ஜாதி இல்லை ஜாதி முல்லையே