Thanimayil Yaar Ival |
|---|
தனிமையில்
யார் இவள்
நீரோடு மீனுண்டு
நிலவோடு வானுண்டு
உறவோடு ஊருண்டு
என்னோடு யாருண்டு
ஏன்ஏன்ஏன்
தனிமையில் யார் இவள்
ஆடி முடித்த மேடை
மூடி வைத்த வேளை
மீண்டும் நாடகம்
அது ஏன் இறைவா
ஆசை என்ன இன்று
ஏங்கும் ஏக்கம்
ஏன்ஏன்ஏன்
தனிமையில் யார் இவள்
பாலைவனத்தின் மீது
படர்வதென்ன முல்லை
ஏதோ காரணம்
இளமை கொடுமை
என்ன செய்யும் பெண்மை
விரகதாபம்
ஏன்ஏன்ஏன் ஹாடார்லிங்
தனிமையில்
யார் இவள்
நீரோடு மீனுண்டு
நிலவோடு வானுண்டு
உறவோடு ஊருண்டு
என்னோடு யாருண்டு
ஏன்ஏன்ஏன்
தனிமையில் யார் இவள்
