Thanjavooru Bommaiyai Paaradi

Thanjavooru Bommaiyai Paaradi Song Lyrics In English


ஹாஆஆஅ

தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே சாஞ்சி நிக்கிற அழகை பாரடி தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே சாஞ்சி நிக்கிற அழகை பாரடி

அஞ்சாறு கலர் சட்டை அதில் யானை குதிரை ஓட்டை ஹாஆஅஆஅ அஞ்சாறு கலர் சட்டை அதில் யானை குதிரை ஓட்டை புதுப் பஞ்சாங்கம் போல் வருஷ மாசம் பதிஞ்சிருக்கிற ஜோருஅதிசயம் பாரு

தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே சாஞ்சி நிக்கிற அழகை பாரடி

அடி வாலு கொண்டைக்காரி நீ வம்புச் சண்டைக்காரி காரி ஆஅகாரிகாரி அடி வாலு கொண்டைக்காரி நீ வம்புச் சண்டைக்காரி நீ வம்புச் சண்டைக்காரி

உன் வாயை அடக்கிப் பேசு தம்பி ஊருதான் பொல்லாது உடம்பு தாங்காது

ஹாஹான்

உன் வாயை அடக்கிப் பேசு தம்பி ஊருதான் பொல்லாது உடம்பு தாங்காது தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே சாஞ்சி நிக்கிற அழகை பாரடி தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே சாஞ்சி நிக்கிற அழகை பாரடி

வம்புக்கிழுக்கிறதும்ஹாஆஅ வாய்ச் சண்டை போடுவதும் பொம்பளைக்கே கூடப் பொறந்த குணம் தம்பி பொம்பளைக்கே கூடப் பொறந்த குணம்

ஜம்பமாப் பேசறதும் சவடால் அடிக்கிறதும் ஆம்பளைக்கே பொதுவா அமைந்த குணம் பொதுவா அமைந்த குணம்

தெரியாதா சொல்லத் தெரியாதா உங்கள் சேதியை இன்னும் சொல்லவா கேலிக்கு இடமல்லவா சொன்னாலே கேலிக்கு இடமல்லவா


ஹோஓஓஓ

தெரியாதா சொல்லத் தெரியாதா உங்கள் சேதியை இன்னும் சொல்லவா கேலிக்கு இடமல்லவா சொன்னாலே கேலிக்கு இடமல்லவா

உள்ளத்தில் குறும்பாய் சிரித்திடுவார் அந்த உண்மையை உதட்டில் மறைத்திடுவார் உள்ளத்தில் குறும்பாய் சிரித்திடுவார் அந்த உண்மையை உதட்டில் மறைத்திடுவார் கள்ளத்தைக் கலையாய் வளர்த்திடுவார் கள்ளத்தைக் கலையாய் வளர்த்திடுவார் கடைக் கண்ணாலே கலகம் விளைத்திடுவார்

தெரியாதா சொல்லத் தெரியாதா உங்கள் சேதியை இன்னும் சொல்லவா கேலிக்கு இடமல்லவா சொன்னாலே கேலிக்கு இடமல்லவா

ஊருக்கு நீதி உரைத்திடுவார் ஊருக்கு நீதி உரைத்திடுவார் தன் வீட்டுக்குள் பெண்ணை அடைத்திடுவார் ஹாஆஅ ஊருக்கு நீதி உரைத்திடுவார் தன் வீட்டுக்குள் பெண்ணை அடைத்திடுவார் கோரிக்கை நிறைவேறக் குழைந்திடுவார் கோரிக்கை நிறைவேறக் குழைந்திடுவார் தன் காரியம் முடிந்த பின் மறந்திடுவார்

தெரியாதா சொல்லத் தெரியாதா உங்கள் சேதியை இன்னும் சொல்லவா கேலிக்கு இடமல்லவா சொன்னாலே கேலிக்கு இடமல்லவா

அன்புடனே முழுமனதோடு பெண்ணை நம்பினால் கொடுப்பாள் திருவோடு அன்புடனே முழுமனதோடு பெண்ணை நம்பினால் கொடுப்பாள் திருவோடு நம்பினால் கொடுப்பாள் திருவோடு

நம்பிய சகுந்தலை பட்டபாடு நம்பிய சகுந்தலை பட்டபாடு இந்த நாடறிந்ததல்லவோ வெட்கக் கேடு

தெரியாதா சொல்லத் தெரியாதா உங்கள் சேதியை இன்னும் சொல்லவா கேலிக்கு இடமல்லவா சொன்னாலே கேலிக்கு இடமல்லவா