Thatthi Thatthi |
---|
தத்தித் தத்தித் தாவிடும்
தங்கக் கிளி நான் தானே
தட்டித் தட்டிப் பார்க்கிறேன்
சொக்கத் தங்கம் நீ தானே
ராத்திரி ராத்திரி வாசனைப் பூப் பறி
வாசக் கதவை சாத்தலாமா
பாயும் பாயும் சேர்க்கலாமா
தத்தித் தத்தித் தாவிடும்
தங்கக் கிளி நீ தானே
தொட்டுத் தொட்டுப் பார்த்திடும்
சொந்தம் இனி நான் தானே
உன் சின்ன இடை மின்னல் என தினமும்
நெளியுதே நெளியுதே
ஹோ ஹோ ஹோ ஹோ
என் பொன் உடல் பின்னி வரும் உடையை
நழுவுதே நழுவுதே
ஹோ ஹோ ஹோ ஹோ
பாவையின் வேதனை பார்வையில் தீருமா
காதல் தீ ஆறுமா கானலும் மாறுமா
அந்தி வருமா மோகம் மீற
ஹா பந்தி இடவா தாகம் தீர
பொன்னாரமே கண் பாரம்மா
முந்தானை தான் பாரமா
தத்தித் தத்தித் தாவிடும்
தங்கக் கிளி நான் தானே
தட்டித் தட்டிப் பார்க்கிறேன்
சொக்கத் தங்கம் நீ தானே
ராத்திரி ராத்திரி வாசனைப் பூப் பறி
வாசக் கதவை ஹேய் சாத்தலாமா
பாயும் பாயும் சேர்க்கலாமா
தத்தித் தத்தித் தாவிடும்
தங்கக் கிளி நான் தானே
தொட்டுத் தொட்டுப் பார்த்திடும்
சொந்தம் இனி நான் தானே
என் அங்கம் எங்கும் அன்புக் கதை எழுத
அனுமதி வழங்கவா
ஹோ ஹோ ஹோ ஹோ
உன் கன்னங்களில் முத்திரையை தரவா
ஹோய் உலகையே மறக்கவா
ஹோ ஹோ ஹோ ஹோ
பகலிலே உருகலாம் இரவிலே பருகலாம்
இருவரும் ஒருவராய் உயிரிலே கலக்கலாம்
இன்ப வேளை நீ சூடேற்று
மஞ்ச ரதமே நீ தேன் ஊற்று
சித்தாடையும் விட்டோடுதே
அத்தானைத்தான் தேடுதே
தத்தித் தத்தித் தாவிடும்
தங்கக் கிளி நீ தானே
தொட்டுத் தொட்டுப் பார்த்திடும்
சொந்தம் இனி நான் தானே
ராத்திரி ராத்திரி வாசனைப் பூப் பறி
வாசக் கதவை சாத்தலாமா
பாயும் பாயும் சேர்க்கலாமா
தத்தித் தத்தித் தாவிடும்
தங்கக் கிளி நான் தானே
தொட்டுத் தொட்டுப் பார்த்திடும்
சொந்தம் இனி நான் தானே