Thedhi Sollattuma Chinnaval

Thedhi Sollattuma Chinnaval Song Lyrics In English




தேதி சொல்லட்டுமா சின்னவள் நான் வெட்கம் விட்டு தேதி சொல்லட்டுமா சின்னவள் நான் வெட்கம் விட்டு

மேளம் கெட்டி மேளம் வேணும் கொட்ட வேணும் உன் நினைவினில் இரவெங்கும் பாடும் விழிகள் எழுதும் கவிதை முழுதும் இரு பறவைகள் சிறகசைத்திட

தேதி சொல்லட்டுமா சின்னவள் நான் வெட்கம் விட்டு சேதி சொல்லட்டுமா உன்னவள்தான் இந்த கன்னி

ஓஒஓஓஹோஹோ கானமில்லா காகம் கூட கவிஞரை தேடும் கானம் பாடும் குயில்கள் கூட தாளத்தை நாடும் வானில் உதிரும் பூக்கள் கூட வாழ்த்துக்கள் பாடும் என் தலைவனின் நினைவு கூட சரித்திரம் எழுதும் ஆஹா எனது இரவு கனவில் கரைய இரு பறவைகள் சிறகசைத்திட

தேதி சொல்லட்டுமா சின்னவள் நான் வெட்கம் விட்டு சேதி சொல்லட்டுமா உன்னவள்தான் இந்த கன்னி




வீணை ஒன்று மேடை ஏற விரலுக்கு ஏங்கும் நீலக் கூந்தல் அருவிக் கூட மயக்கத்தில் ஆடும்

நிதமும் பூசும் மஞ்சள் கூட நாணத்தில் சிவக்கும் நாளது வரும்வரை பற்கனவுகள் மறுவுரு எடுக்கும் ஆஹா நினைவு மழையில் நனைந்த பொழுதில் இரு பறவைகள் சிறகசைத்திட

தேதி சொல்லட்டுமா மாலை சூடும் நாளை எண்ணி சேதி சொல்லட்டுமா மன்னவனே வெட்கம் விட்டு மேளம் கெட்டி மேளம் வேணும் கொட்ட வேணும்

லல்லா லல லல்லா லல்லா லல லல்லா தன்னா தனதன்னா தன்னா தனதன்னா