Thillai Ambala |
|---|
தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம்
ஆமா அதன் பேருதான்
சிதம்பரம்னு சொல்லுவா என்ன இப்போ
தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம்
அதைக் கண்ட பேர்க்கு
ஜனன மரண பிணியை கருக்குதாம்
உண்மைதான்
அங்க போய் பகவான தரிசனம் பண்ணீட்டு வந்தா
ஜென்மமே சாபல்யம் அடையும்
போய் வருக
யாருடா
நான் போய் வருக உத்தாரம் தாருமே
ஆ நீயா
உங்கள் பொன்னடியை போற்றினேன்
திருக் கண்ணால் பாருமே என் சுவாமி
தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம்
அதைக் கண்ட பேர்க்கு
ஜனன மரண பிணியை கருக்குதாம்
நந்தா உன்ன நம்பி
நாற்பது வேலி நெலத்த விட்டு வச்சிருக்கேன்
இந்த நெலமைல தில்ல உனக்கொரு கேடா
இந்தா பார் எல்லாத்தையும் உழுது பயிரிட்டு
அருவட செய்திட்டு அதுக்கப்பறம்
எங்க வேணாலும் போ வேலையப் பார்
ஆண்டே ஆண்டே
போடா வேலைய பாருடா
நாளை போகாமல் நான் இருப்பேனோஒ
இந்த நாறும் உடலை கண்டு களிப்பேனோ
நான் நாளை போகாமல் இருப்பேனோ
இந்த நாறும் உடலை கண்டு களிப்பேனோ
நாளை போகாமல் நான் இருப்பேனோ ஓ
இந்த நாக்கு நரம்பும் இன்னும் சுமப்பேனோ
நாளை போகாமல் நான் இருப்பேனோஓஓஓஓ
நாளை போகாமல் நான் இருப்பேனோ
