Thottathu Mappillai

Thottathu Mappillai Song Lyrics In English


தோட்டத்து மாப்பிள்ளை
வீட்டை தேடி வந்தால்
சும்மா வரலாமா
தன் தோள்களில்
மாலை சூடிய பெண்ணை
தனியே விடலாமா

காட்டுக் குறமகள்
காதல் மணமகள்
கண்ணீர் விடலாமா
அவள் கட்டிய பூவினில்
ஒட்டிய காதலும்
காற்றில் போய் விடுமா ஹா
காற்றில் போய் விடுமா
பட்ட கடனும் தீர்ந்திடுமா

தோட்டத்து மாப்பிள்ளை
வீட்டை தேடி வந்தால்
சும்மா வரலாமா
தன் தோள்களில்
மாலை சூடிய பெண்ணை
தனியே விடலாமா

முழங்கால் வரையும்
மூடிய ஆடை
மோகம் தரவில்லையா
அவள் முன் வரும் ஜாடையும்
பின் வரும் வாடையும்
வேகம் தரவில்லையோ ஹோய்
வீரம் தரவில்லையா
அதில் மோகம் வரவில்லையா


தோட்டத்து மாப்பிள்ளை
வீட்டை தேடி வந்தால்
சும்மா வரலாமாஆஅஆ
தன் தோள்களில்
மாலை சூடிய பெண்ணை
தனியே விடலாமா

தாக்கிய கண்கள் ஈட்டியைப் போலே
சரியாய் விழவில்லையா
அவள் தள தள மேனியும்
கல கல பாணியும்
சரசம் தரவில்லையா ஹா
சரசம் தரவில்லையா
நெஞ்சில் சபலம் வரவில்லையா

தோட்டத்து மாப்பிள்ளை
வீட்டை தேடி வந்தால்
சும்மா வரலாமாஆஅஆ
தன் தோள்களில்
மாலை சூடிய பெண்ணை
தனியே விடலாமா