Unn Manasula Paattuthaan Irukkuthu Sad

Unn Manasula Paattuthaan Irukkuthu Sad Song Lyrics In English


உன் மனசுல பாட்டு
தான் இருக்குது என் மனசதை
கேட்டு தான் தவிக்குது

இது ஒன்ன மட்டும்
பாடும் பூங்குயில் தினம்
எண்ணி எண்ணி வாடும்
பெண் மயில்

மனசு முழுதும்
சருகாய் கருக மயங்கும்
நினைவோ மெழுகாய் உருக

உன் மனசுல பாட்டு
தான் இருக்குது என் மனசதை
கேட்டு தான் தவிக்குது

பாட்டால புள்ளி
வச்சி பார்வையில கிள்ளி
வச்சி பூ போல என்னை
சேர்ந்த தேவியே காதோட
வந்து வந்து காதோட சொன்ன
சிந்து கேட்காம போகும் வேறு
பாதையே

நெஞ்சோடு கூடு
கட்டி சேர்ந்திருந்த ஜோடி
தான் இப்போது தனி தனியாய்
போனதென்ன கோலம் தான்

எட்டு திக்கும் உன்ன
எண்ணி இந்த மனம் தேடும்
பாட்டு குயில் உன்ன மட்டும்
நாளும் பாடும்

உன் மனசுல பாட்டு
தான் இருக்குது என் மனசதை
கேட்டு தான் தவிக்குது

ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ


நீ பாடும் ராகம் வந்து
என் உசுர தொட்டதையா
நெஞ்சை விட்டு நேசம் பாசம்
போகல பூச்சூடும் வேளையிலே
முள்ளு ஒன்னு தச்சத்தையா
பொன்னாரம் சூட காலம் கூடல

உன்னோட வாழ்ந்திருந்தா
ஊருக்கெல்லாம் ராணி நான்
உண்ணாம தணிச்சிருந்து
வாடுதய்யா மேனி தான்

உங்கள தான் எண்ணி
எண்ணி என் உசுரு தேடும்
கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள
கலந்தே வாழும்

உன் மனசுல பாட்டு
தான் இருக்குது என் மனசதை
கேட்டு தான் தவிக்குது

இது ஒன்ன மட்டும்
பாடும் பூங்குயில் தினம்
எண்ணி எண்ணி வாடும்
பெண் மயில்

மனசு முழுதும்
சருகாய் கருக மயங்கும்
நினைவோ மெழுகாய்
உருக

உன் மனசுல பாட்டு
தான் இருக்குது என் மனசதை
கேட்டு தான் தவிக்குது