Vaa Thambi Sagayam

Vaa Thambi Sagayam Song Lyrics In English

வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம் வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம் ராத்திரியில் சுதந்திரத்தை வாங்கி நாம கோட்ட விட்டோம் எல்லாத்தையும் தூங்கி தூங்கி தூங்கி

வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம் வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம்

காந்தி கண்ட கனவு என்ன ஆச்சு இப்ப கடவுளையும் திருடும் காலம் ஆச்சு நாட்டக் கெடுக்கும் கட்சி மேடை பேச்சு அதக் கேட்டு கேட்டு காதும் புளிச்சு போச்சு

ஊர ஏச்சி பொழப்பு நடக்குது ஏழை ஜாதி எளச்சு கெடக்குது பதவி போட்டி நடக்குது பணமும் பலமும் மிரட்டுது பயந்து கெடந்த காலம் போதும் துணிஞ்சா பெருமை உனக்கு

வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம் வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம் ராத்திரியில் சுதந்திரத்தை வாங்கி நாம கோட்ட விட்டோம் எல்லாத்தையும் தூங்கி தூங்கி தூங்கி

வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம் வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம்

சட்டமும் திட்டமும் துட்டுலதானே இருக்கு நம்ம கட்சிங்க எல்லாம் கர படிஞ்சு இருக்கு அட பட்டினி குரலை எட்டுக் கட்டையில கேட்டு நாம பாடி வச்சோம் பரம்பரைக்கே பாட்டு

நாட்டு நடப்ப சிந்திக்க வேணும் ஞாயம் அழிஞ்சா தண்டிக்க வேணும் அடிமை விலங்க ஒடைக்கணும் புதிய உலகம் படைக்கணும் உறங்கி கிடக்கும் சுதந்திரமும் விழிச்சா ஜெயிப்பு நமக்கு