Vaa Vaa Aadi Vaa |
|---|
வா வா ஆடி வா
வா வா ஆடி வா
காதோரம் தவழும் பூபாளம் இனிக்கும்
தீயான விழிகள் பூவாக இழுக்கும்
மது வசந்தம் புது மயக்கம் சிறு சலங்கை
மணிக் குரல் தரும் மயில் இவள்
வா வா ஆடி வா
காவேரி ஓடி காலோடு ஆடும்
கண்ணோடம் ரெண்டும் தாளங்கள் வளர்ந்திடுமோ
கையோடு பாவம் காலத்தை வெல்லும்
கல் கூட இங்கே ராகங்கள் இசைத்திடுமோ
வளர்பிறையில் பனித்துளிப் போல்
இளம் வியர்வை துடிதுடிக்கும்
உடல் முழுதும் மலர் சிரிக்கும்
நடை கொடியினில் இவள் உயிர் மலரோ
சுருக்கம் பிறக்கும் வரை
ஒருத்தி சிரித்து வர
போதை காதல் பார்வை கவிதை
உலாவும் நிலாவே உல்லாசம் ஆயிரம்
ஆனந்தம் நீந்திடும் அழகிய சுகம்
வா வா ஆடி வா
உன்னை அழைத்தேன்
வா வா ஆடி வா
காதல் தரும் தேவி வரும் காமபாணம் கோடி
மேகங்கள் தீபங்கள் ஏந்தும் பொன்மாலை
இளந்தென்றல் தேரில் இரவென்னும் ஊரில்
விளையாடும் நேரமே
ஆஅஆஅஆஆஆ
விழி மூடும் கோலமே
இளமை இனிமை தர இதயம் புதுமை பெற
பாடுதே ஆடுதே இளம்பருவம்
இணைத்து இனிக்கவா அணைத்து எடுக்கவா
எடுத்து கொடுக்கவா
வாவாஆடி வா
வா வா ஆடி வா
வா வா ஆடி வா
உன்னை அழைத்தேன்
வா வா ஆடி வா
