Vaa Vaa Anbe

Vaa Vaa Anbe Song Lyrics In English




வா வா அன்பே
பூஜை உண்டு பூஜைக்கேற்ற
பூக்கள் ரெண்டு

பறவை அழைத்தது
அதற்கொரு துணையும்
கிடைத்தது சிறகை விரித்தது
வலம் வரத்தான்

வா வா அன்பே
பூஜை உண்டு வா வா
அன்பே

மாலை நேர சூரியன்
மேற்கிலிருந்து பார்க்கிறான்
வேலி ஓர பூக்களின்
வசந்த கீதம் கேட்கிறான்

அந்தி வெயில்
வேலைதான் ஆசை
பூக்கும் நேரம் புல்லின்
மீது வாடைதான் பனியை
மெல்ல தூவும்

போதும் போதும்
தீர்ந்தது வேதனை

வண்ண
மானும்தான் சேர்ந்தது
நாதனை

விரலை
கண்டதும் மீட்ட
சொன்னது வீணை

வா வா அன்பே
பூஜை உண்டு பூஜைக்கேற்ற
பூக்கள் ரெண்டு

பறவை அழைத்தது
அதற்கொரு துணையும்
கிடைத்தது சிறகை விரித்தது
வலம் வரத்தான்


வா வா
அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே

நீலம் பூத்த
பார்வைகள் நூறு
கடிதம் போட்டது
நீயும் நானும் சேர்ந்திட
நேரம் பொழுது கேட்டது

மலரை வண்டு
மொய்த்திட மாதம்
தேதி ஏது மீன மேஷம்
பார்ப்பதோ காதல்
தோன்றும் போது

காலை மாலை
ஏங்கினேன் ஏங்கினேன்

கையில் நான்
உன்னை வாங்கினேன்
வாங்கினேன்

நீயும் நீயல்ல
நானும் நானல்ல
கண்ணா

வா வா அன்பே
பூஜை உண்டு பூஜைக்கேற்ற
பூக்கள் ரெண்டு

பறவை அழைத்தது
அதற்கொரு துணையும்
கிடைத்தது சிறகை விரித்தது
வலம் வரத்தான்

வா வா அன்பே
பூஜை உண்டு
வா வா அன்பே