Vaanam Enge Mudikiradhu

Vaanam Enge Mudikiradhu Song Lyrics In English


 வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள் வாழ்க்கை எங்கே முடிகிறது கண்டு பிடிக்க செல்லுங்கள்

 பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள்

 நதியின் முடிவை நாமறிவோம் விதியின் முடிவை யாரறிவார் இரவின் முடிவை நாம் அறிவோம் உறவின் முடிவை யார் அறிவார்

 நேற்றுகள் இனிமேல் வருவதில்லை நாளைகள் இன்னும் வரவில்லை நேற்றுகள் இனிமேல் வருவதில்லை நாளைகள் இன்னும் வரவில்லை

 பாதைகள் இங்கே தெரியவில்லை பயணங்கள் மட்டும் முடியவில்லை வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள்


 இமையே உனக்கு உறக்கமில்லை இரவே உனக்கு இரக்கமில்லை இதயம் பிரிவை பொறுக்கவில்லை எனக்கோ அழுது பழக்கமில்லை

 தெய்வத்தை எங்கே தேடுவது திசைகள் எங்கே சேருவது தெய்வத்தை எங்கே தேடுவது திசைகள் எங்கே சேருவது நதி வழிப் போகும் பொம்மையை போல் விதி வழிப் போகும் பெண்மை இது

 வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள் வாழ்க்கை எங்கே முடிகிறது கண்டு பிடிக்க செல்லுங்கள்

 பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே