Vanam Pozhiyattum

Vanam Pozhiyattum Song Lyrics In English


தானன தானன தானன தானன தந்தானானா தானன தானன தானன தானன தந்தானானா தானன தானன தானா தானன தானன தானா

வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும் வளையல் குலுங்க கும்மியடி கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும் கலயம் தீர கும்மியடி

சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம் நல்ல தாலி வரட்டும் கும்மியடி சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம் நல்ல தாலி வரட்டும் கும்மியடி

அட தளுக்கி கும்மியடி கொஞ்சம் குலுக்கி கும்மியடி அட தளுக்கி கும்மியடி கொஞ்சம் குலுக்கி கும்மியடி

வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும் வளையல் குலுங்க கும்மியடி கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும் கலயம் தீர கும்மியடி

தானன தானன தானன தானன தந்தானானா தானன தானன தானன தானன தந்தானானா

உழுகிற பொழப்பு எல்லாம் மழைய நம்பியல்லோ உழுதவன் இருப்பதெல்லாம் வெலைய நம்பியல்லோ கோவணத்த அடகு வச்சு கூழு குடிக்கும் போது கூரையப் போய் ஏலம் விட்டால் கடன் அடைப்பது ஏது

ஏரோடு போராடும் ரெண்டு கண்ணில் நீரோட்டம் தெய்வத்துக்கு கருணை இல்ல எதுக்கு இங்கே தேரோட்டம்

மண்ணை கிண்டும் ஜாதி அழுவதென்ன நீதி மண்ணை கிண்டும் ஜாதி அழுவதென்ன நீதி குமரிப் பிள்ளைகள் சேர்ந்து கும்மியடிக்கட்டுமே குமரிப் பிள்ளைகள் சேர்ந்து கும்மியடிக்கட்டுமே

வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும் வளையல் குலுங்க கும்மியடி கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும் கவலை தீர கும்மியடி


சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம் நல்ல தாலி வரட்டும் கும்மியடி சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம் நல்ல தாலி வரட்டும் கும்மியடி

அட தளுக்கி கும்மியடி கொஞ்சம் குலுக்கி கும்மியடி அட தளுக்கி கும்மியடி கொஞ்சம் குலுக்கி கும்மியடி



மஞ்சக் காணி வெளஞ்சு வந்தா பஞ்சம் இல்லையடி கரிசக் காடு பலன் கொடுத்தால் கவலை இல்லையடி நாத்தெடுத்து நட்டு வச்சா வயலுக்கு அழகாகும் பூமியெல்லாம் நம்ம போல புஷ்பவதியாகும்

பச்ச மரத்த வெட்டிப்புட்டா மழையும் இங்கே இருக்காது ஏரி கொளம் மூடிப்புட்டா எதுவும் இங்கே நடக்காது

மார்கழிக்கு மேலே தை இருக்குதடி மார்கழிக்கு மேலே தை இருக்குதடி பாடுபட்டு வாழ கை இருக்குதடி பாடுபட்டு வாழ கை இருக்குதடி

வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும் வளையல் குலுங்க கும்மியடி கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும் கவலை தீர கும்மியடி

சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம் நல்ல தாலி வரட்டும் கும்மியடி சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம் நல்ல தாலி வரட்டும் கும்மியடி

அட தளுக்கி கும்மியடி கொஞ்சம் குலுக்கி கும்மியடி அட தளுக்கி கும்மியடி கொஞ்சம் குலுக்கி கும்மியடி அட தளுக்கி கும்மியடி கொஞ்சம் குலுக்கி கும்மியடி அட தளுக்கி கும்மியடி கொஞ்சம் குலுக்கி கும்மியடி