Vanga Kadalin |
---|
வங்கக் கடலின் ஓரத்திலே
சக்தி வேள்வியும் நடக்குதம்மா
இந்த வேள்வியினால் என் கேள்விக்கெல்லாம்
ஓர் விடையும் கிடைக்குமம்மா
சக்தி பீடத்தின் நாயகன் வளர்க்கும்
சாந்தி வேள்வி இதுதான்
இந்த வேள்வியில் விளையும் அன்பும் அமைதியும்
உயிர்களுக்கெல்லாம் பொதுதான்
சக்தி பீடத்தின் நாயகன் வளர்க்கும்
சாந்தி வேள்வி இதுதான்
இந்த வேள்வியில் விளையும் அன்பும் அமைதியும்
உயிர்களுக்கெல்லாம் பொதுதான்
என் அண்ணனும் உனது பிள்ளையம்மா
அவன் இதயத்தில் நிம்மதி இல்லையம்மா
கண்ணென என்னை காத்தவன் வாழ்வில்
புன்னகை பூக்க வேண்டுமம்மா
அம்மம்மாஆஆஆஆஆஆஆஆ
வங்கக் கடலின் ஓரத்திலே
சக்தி வேள்வியும் நடக்குதம்மா
இந்த வேள்வியினால் என் கேள்விக்கெல்லாம்
ஓர் விடையும் கிடைத்திடுமா
மாலை சூரியன் மறையும் வேளையில்
வெளுப்பதுண்டோ கிழக்கு
இங்கு விடியல் தேடியே நானிருக்க அங்கு
வேள்வி என்னடி உனக்கு
உனை தாயென நினைத்த சேயல்லவா
மூல மந்திரம் உரைத்த வாயல்லவா
நம்பிய பாவம் நான் செய்தேனடி
கை விட்ட பாவம் நீ செய்தாய்
அம்மம்மாஆஆஆஆஆஆஆஆ
வங்கக் கடலின் ஓரத்திலே சக்தி
வேள்வியும் நடக்குதம்மா இந்த
வேள்வியினால் என் கேள்விக்கெல்லாம் ஓர்
விடையும் கிடைக்குமம்மா
பெண்ணென பிறந்து பூவென மலர்ந்து
பேயாய் திரிந்தேன் நான்தான்
இரு கண்மலர் திறந்து கருணையும் பொழிந்து
தாயாய் காத்தவள் நீதான்
பெற்றவர் இல்லா பெண்பிள்ளை எனக்கு
உற்றவள் இங்கே நீதான்
ஒரு பக்தனை மணக்க அருள் வாக்குரைத்து
பூ மணம் முடித்த தாய்தான்
என் நாதனை பிரிக்க முடிவெடுத்தாய்
ஒரு நாகத்தை போலே வடிவெடுத்தாய்
இங்கு ஊரார் பழிக்கு இரையாக
அண்ணன் வீடே எனக்கோர் சிறையாக
அண்ணனின் வாழ்வும் ஆனந்தம் காண
அம்மா நீதான் வழி வகுப்பாய்
இன்னமும் உன்னை நம்பிடவா
வெறும் கல்தான் உன்னை கும்பிடவா
வங்கக் கடலின் ஓரத்திலே சக்தி
வேள்வியும் நடக்குதம்மா
அந்த வேள்வியினால் என் கேள்விக்கெல்லாம் ஓர்
விடையும் கிடைத்திடுமா
வங்கக் கடலின் ஓரத்திலே
சக்தி வேள்வியும் நடக்குதம்மா
வேள்வியும் நடக்குதம்மா
வேள்வியும் நடக்குதம்மா