Vangaiya Vanga |
|---|
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ஹீம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ஹீம் ஹ்ம்ம்
வருக வருகவெல்கம் டு ஊட்டி
வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க
வழியெல்லாம் பனித் தூவும் ஊர்தாங்க
ஜூஜூ ஜூஜூ ஜூ
மலையின் ராணி அழகில் ராணி
மயக்கும் சிங்கார தோணி
ஜூஜூ ஜூஜூ ஜூ
துன்பத்தை தீர்க்கிற ஊரு
இதில் இன்பத்தை காணுங்க
இது சொர்க்கத்தில் ஆடிடும் ஊஞ்சல்
இதில் ஊர்வலம் செல்லுங்க
வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க
வழியெல்லாம் பனித் தூவும் ஊர்தாங்க
ஜூஜூ ஜூஜூ ஜூ
மலையின் ராணி அழகில் ராணி
மயக்கும் சிங்கார தோணி
இது பொட்டானிக்கல் கார்டன்
இங்கே பொழுது போக்க வாங்க
இது தொட்டபெட்டா சிகரம்
இதை தொட்டுப் பார்க்க வாங்க
அழகான மலர்க்காட்சி வருஷந்தோறும் உண்டு
அதைப் பார்க்க வருவாங்க மக்கள் கோடியே
படகோட்டி விளையாட ஏரி இங்கே உண்டு
பல பேரும் வருவாங்க சுகம் தேடியே
மாப்பிள்ளை போலே மேகங்கள் வந்து
மலை மங்கை நாண உறவாடுமே
இந்த மலைகளின் உயரத்தை போலே
இந்த மரங்களும் சிரிக்குங்க
அந்த மரங்களின் நிழலைப் போலே
தினம் வாழ்ந்திட உதவுங்க
வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க
வழியெல்லாம் பனித் தூவும் ஊர்தாங்க
ஜூஜூ ஜூஜூ ஜூ
மலையின் ராணி அழகில் ராணி
மயக்கும் சிங்கார தோணி ஆ
சிம்ஸ் பார்க்கும் உண்டு
இங்கே ஜோடி சேர்ந்து வாங்க
இயற்கை காட்சி தாங்க
உங்க மனசுக்கு இதமுங்க
எதிர்பாரா திருப்பங்கள் வழியில் ரொம்ப உண்டு
இதைப் போல திருப்பங்கள் வாழ்வில் உண்டுங்க
இதைத் தாண்டி மேலேறி வந்தாதாங்க இன்பம்
அதைப் போல தடை தாண்டி வெற்றிக் தேடுங்க
தேசத்தில் ஏது இதைப்போல ஊரு ஹான்
சிங்காரத் தோட்டம் இதுதானுங்க
இந்த இயற்கையை கெடுத்துவிடாமல்
இதை காக்கணும் நீங்கதாங்க
இது செல்வரும் ஏழையும் சேர்ந்து
சந்திக்கிற இடமய்யா
வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க
வழியெல்லாம் பனித் தூவும் ஊர்தாங்க
ஜூஜூ ஜூஜூ ஜூ
மலையின் ராணி அழகில் ராணி
மயக்கும் சிங்கார தோணி
ஜூஜூ ஜூஜூ ஜூ
துன்பத்தை தீர்க்கிற ஊரு
இதில் இன்பத்தை காணுங்க
இது சொர்க்கத்தில் ஆடிடும் ஊஞ்சல்
இதில் ஊர்வலம் செல்லுங்க
வருவோமே நாங்க
தேங்க் யூ
ஊட்டிக்குதாங்க
வெரி மச்
வாழ்வெல்லம் வருவோமே
இனிதாக
தெட்ஸ் வெரி குட்
ஜூஜூ ஜூஜூ ஜூஜூ ஜூஜூ
