Veenaiyadi Nee Enakku

Veenaiyadi Nee Enakku Song Lyrics In English


பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு வாயுரைக்க வருகுவதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம் தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா

வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு

இருவர் : வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு

வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு ஆஅஆஅஆஅஆ வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு

பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு


ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் ஜோதிமுகம் ஊனமறு நல்லழகேநல்லழகே ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா

காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே நாத வடிவானவளே இருவர் : நாத வடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா

வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு