Vendina Vendum Varam

Vendina Vendum Varam Song Lyrics In English


வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா

எனக்கொரு வரம் தருவாயா என் காதலியை கொண்டு வருவாயா எனக்கொரு வரம் தருவாயா என் காதலியை கொண்டு வருவாயா

வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா ஹேய் ஹேய்

உன்னை எண்ணி உருகி நிக்கும் அன்பு மயில் இங்கிருக்க அம்மனிடம் காதலியை கேட்பதும் என்ன உள்ளங்கையில் நெல்லிக் கனி கையில் உள்ள தங்கக் கனி இங்கிருக்க வெளியில் அதை தேடுவதென்ன

காலுமின்றி கண்ணுமின்றி வழி நடக்கும் காதல் நாளும் உன்னை தேடச் சொல்லி தூண்டுதடி ஆவல்

நான் பார்த்த பூ வனத்தில் ஆடும் பூவு நீ வந்து பூ எடுத்து சூடும் போது கெட்ட மனசோ நச்சரிக்குதே முத்து சரம் முட்டிப் போடும் மாமா

வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா

ஆண் ஓஹ்ஹோ ஹோ ஓஹோஹோ ஹோ வெண் முத்துப்போல் ஒரு கண்ணப் பறிக்கிற வண்ண மலர் எடுத்து பெண் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆண் கண்ணுக்குள் ஆடிடும் கண்மணி காதலிக்கு அன்பு மாலை தொடுத்து பெண் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


ஆண் சங்குக் கழுத்துல போடவா பெண் ஓஓஓஹ் ஆண் அந்த சங்கதி கொஞ்சம் பேசவா பெண் ஓஓஓஹ்

கோவிலிலே அடிச்ச மணி கூறுதம்மா நல் வரவை திருநாள் காண மனம் ஏங்கி நிக்குதம்மா

மனசில் உன்னை சிலை வடிச்சு கோயில் ஒண்ண கட்டி வச்சேன் மாலை ஒண்ணா மாத்திக் கொள்ள தேதி வெக்கணுமா

நாளும் எந்தன் மனசுக்குள்ளே நாதஸ்வர ஓசை ஆள் அரவம் இல்லாதப்போ தினம் நடக்கும் பூசை உற்றாருக்கும் சேதி சொல்ல வேணும் வேணும் மற்றவரும் வாழ்த்து சொல்ல வேணும் வேணும் அம்மனின் முன்னே வேண்டும் வரமே கெட்டி மேளம் கொட்ட செய்யும் வாம்மா

வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா

எனக்கொரு வரம் தருவாயா என் காதலியை கொண்டு வருவாயா எனக்கொரு வரம் தருவாயா என் காதலியை கொண்டு வருவாயா