Vilayadu Mankatha

Vilayadu Mankatha Song Lyrics In English




ஆடவா அரங்கேற்றி
பாடவா அடியார்கள் கூடவா
விடை போட்டு தேடவா

பூமியில் புதிதான
தோழனே புகழ் கூறும்
சீடனே நீ வா வா தீரனே

விளையாடு மங்காத்தா
விடமாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா
இந்த வெற்றி கிட்ட வராதா

மனதினை மாற்றடா
ஓகே
மகிழ்ச்சியை ஏற்றடா
ஓகே
குறைகளை நீக்கடா
ஹே ஹே
தடைகளை தூக்கி
போட்டு போடா உடலுக்குள்
நெருப்படா
ஓ ஓ
உணர்வுகள்
கொதிப்படா
ஹா ஹா
புதுவிதி எழுதடா
ஏ ஏ
புரட்சியை
செய்து காட்டவாடா



தீண்டவா என்னை
தொட்டு தூண்டவா உயிர்
தன்னை தாண்டவா துணை
ஆனாய் ஆண்டவா

மோதவா
முழுமோக தூதுவா
முகம் ஜோதி அல்லவா
மொழி இன்றி சொல்லவா

புத்தி என்பதே
சக்தி என்பதாய் கற்று
கொள்ளடா என் நண்பா

பக்தி என்பதை
தொழிலில் வைத்து வா
நித்தம் வெற்றிதான் என்
நண்பா


இது புதுக்குறள்
திருக்குறள் தானே இதை
புரிந்தபின் தடை ஏது முன்னே

நீ பொறுப்பினை
ஏற்று புது பணி ஆற்று
போக வேண்டும் மேலே
முன்னேறு



விளையாடு மங்காத்தா
விடமாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா
இந்த வெற்றி கிட்ட வராதா

மனிதனை
விழிக்கவெய் ஓகே
நினைவினை துவைத்து
வெய் ஓகே
கனவினை ஜெயிக்க
வெய் ஓகே
கவனத்தை தொழிலில்
வைத்து வாடா

உறவினை பெருக்கி
வெய் ஓகே
உயர்வினில் பணிந்து
வெய் ஓகே
உண்மையை நிலைக்க
வெய் ஓகே
உலகத்தை திரும்பி
பார்க்க வெய்டா

விளையாடு மங்காத்தா
விடமாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா
இந்த வெற்றி கிட்ட வராதா