வில்லாதி வில்லி பாடல் வரிகள்

Starring Vikram Prabhu, Mahima Nambiar
Movie Asura Guru
Music ByGanesh Raghavendra
Lyric By Kabilan Vairamuthu
SingersNaresh Iyer, Rita Thyagarajan
Year 2019

Villadhi Villi Song Lyrics In English

வில்லாதி வில்லி
எந்தன் பக்கம் வந்தாய்
தூங்காமல் துப்பறிந்து
தோழி ஆனாய்

நஞ்சுள்ள கள்ளன் என்றே
எண்ணம் கொண்டாய்
நெஞ்சுள்ள நல்லன் என்று
கண்டறிந்தாய்

சிடுசிடுவென சீண்டிட்டாய்
சடுகுடு என ஆடிட்டாய்
பரபரவென தினமும் போரிட்டாய்

ஓ என் திறமை வாசித்தாய்
என் தனிமை நேசித்தாய்
திசை மாறிய தென்றல் போல நின்றாய்

தடுப்பணை ஏதும் இல்லா
நதி தொடர் நான்தானே
நிராயுதன் உன்னை கண்டு
சற்றே நின்றேனே

அடாவடி வாதம் செய்யும்
தடாலடி பெண்தானே
அலாவுதீன் பூதம் போல
அன்பாய் பூத்தேனே

வழி தவறிய சோகம்
விரைவினில் அது தீரும்
உன்னை மறந்து

உந்தன் விழிகள் தூங்குமே
ஓ நிழல் உலகம் போதும்
நினை அழைக்கும் காலம்
இருளை விட்டு வெளியே வருவாய் நீயே

வில்லாதி வில்லி
எந்தன் பக்கம் வந்தாய்
தூங்காமல் துப்பறிந்து
தோழி ஆனாய்


இனிமைகள் ஏதும் இல்லா
துணிகரம் நான்தானே
மனோகரி உந்தன் நட்பில்
மவ்வம் கண்டேனே

அளாவுதல் ஏதுமின்றி
உலா வரும் ஆண்தானே
களேபரகன்னி உந்தன்
பரிவில் சரிந்தேன்னே

தலை மறைகிற என்னில்
குறை உள்ள ஒரு நெஞ்சில்
முதல் முதலாய் மாற்றம் ஒன்று
தோன்றுதே

ஓ தரிக்கெட்ட ஒரு வானம்
தரை இறங்கிடும் நேரம்
அரவணைக்கும் பூமி பாதை நீயே

வில்லாதி வில்லி
எந்தன் பக்கம் வந்தாய்
தூங்காமல் துப்பறிந்து
தோழி ஆனாய்

நஞ்சுள்ள கள்ளன் என்றே
எண்ணம் கொண்டாய்
நெஞ்சுள்ள நல்லன் என்று
கண்டறிந்தாய்

வெகு நாளாய் குறி வைத்தேன்
விரல் தடயங்கள் சோதித்தேன்
உன்னை சிறையிட வழிகள் தேடினேன்
ஓ உன் சரிதை வாசித்தேன்

உன் தனிமை நேசித்தேன்
உனக்கென சில கேள்விகள்
பரிசாய் தந்தேன்

Villadhi Villi Song Lyrics from movie Asura Guru. Villadhi Villi song sung by Naresh Iyer, Rita Thyagarajan. Villadhi Villi Song Composed by Ganesh Raghavendra. Villadhi Villi Song Lyrics was Penned by Kabilan Vairamuthu. Asura Guru movie cast Vikram Prabhu, Mahima Nambiar in the lead role actor and actress. Asura Guru movie released on 2019