Vizhi Pesum

Vizhi Pesum Song Lyrics In English


விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ நான் உன்னை சேரவே வானவில் கோலமோ கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ



அழகே நீ இளைப்பாற ஒரு மேகம் நான் பிடித்திடவா தினமும் கதை பேச நிலவை நான் வாங்கவா நீ குளித்து தலை காய புயல் காற்றை நான் அழைத்திடவா நித்திரையில் உன்னை காக்க சூரியனை தள்ளவா

மௌனமாக நானும் பேச உன் பதில் வருமா வெட்கத்தில் உன் மார்பில் சாய இடம் அது தருமா கைகள் கோர்த்து காதல் செய்ய வாழ்வின் வரமா கனவில் வாழும் இந்த வாழ்க்கை வாழ்ந்தால் சுகமாஆஅ

ஆஆஅஆ

களைப்பாக வரும் வேளை உன்னை பார்க்க வாசல் வரவா மகிழுந்தின் ஒலி கேட்க நெற்றி பொட்டு சூடவா நீ உறங்கும் என் மடியை தலையணையாய் மாற்றிடவா நள்ளிரவில் நீ சிணுங்க தாலாட்டும் பாடவா


தாயை போல தாரம் நீயும் தேவதை உறவா சேர்ந்து வாழும் நாட்கள் எல்லாம் காதலின் பதிவா உன்னை அன்பில் மிஞ்சும் ஒருத்தி பூமியில் வருவா தந்தாய் என்று என்னை சொல்லி முத்தமும் தருவாஆஅ

விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ

தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ நான் உன்னை சேரவே வானவில் கோலமோ

இருவர் : கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்