Vizhigale Kanigale Thirunal

Vizhigale Kanigale Thirunal Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

விழிகளே கனிகளே திருநாள் இதுதான் இளமையின் நிறைக்குடம் இணைந்தது இரு மனம் புது வகை அறிமுகம் மனதுக்கு சுகம் தரும்

விழிகளே லலல்லலா கனிகளே லலல்லலா

திருநாள் இதுதான் இளமையின் நிறைக்குடம் இணைந்தது இரு மனம் புது வகை அறிமுகம் மனதுக்கு சுகம் தரும்



மாலை இளவெயில் சோலை மணிக்குயில் ரகசிய மொழிகளில் நவரச கலைகளை அறிந்திட அழைக்கிறதே மாலை இளவெயில் சோலை மணிக்குயில் ரகசிய மொழிகளில் நவரச கலைகளை அறிந்திட அழைக்கிறதே

நேசம் எனும் வலை விரித்திடும் பேசும் உயிர்ச்சிலை சிரிக்கையில் அலையாய் எழுந்தே குடையாய் விரிந்தே பறக்குது வாலிப பறவை


விழிகளே கனிகளே திருநாள் இதுதான் இளமையின் நிறைக்குடம் இணைந்தது இரு மனம் புது வகை அறிமுகம் மனதுக்கு சுகம் தரும்



ஆடும் புது நிலா காதல் தரும் கலா இருபது வயதுக்கு அழகிய கனவுக்கு எழுதிய முகவுரையே ஆடும் புது நிலா காதல் தரும் கலா இருபது வயதுக்கு அழகிய கனவுக்கு எழுதிய முகவுரையே

காதல் நதிக்கரை அதை இரு கைகள் தொடும்வரை இமை எனும் கதவோ தினமும் திறந்தே இருக்கும் புது வித மயக்கத்தில் தவிக்கும்

விழிகளே லலல்லலா கனிகளே லலல்லலா

திருநாள் இதுதான் இளமையின் நிறைக்குடம் இணைந்தது இரு மனம் புது வகை அறிமுகம் மனதுக்கு சுகம் தரும் புது வகை அறிமுகம் மனதுக்கு சுகம் தரும்