Yaarukko Thirumagale

Yaarukko Thirumagale Song Lyrics In English


பாடகர்கள் : டி எம் சௌந்தராஜன் மற்றும் பி சுஷீலா

இசை அமைப்பாளர் : ஆர் சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : வாலி

தத்தும் கிளி தொத்திக் கொள்ள தோளிருக்கு பாத்துக்கடி கத்தும் குயில் கற்றுக் கொள்ள பாட்டிருக்கு கேட்டுக்கடி

யாருக்கோ திருமகளே எங்கப்பாவுக்கு மருமகளே யாருக்கோ திருமகளே எங்கப்பாவுக்கு மருமகளே பொன்னுக்கு நிறம் கொடுக்க பொன்னுக்கு நிறம் கொடுக்க பூமியிலே பிறந்தவளே

யாருக்கோ யாருக்கோ திருமகளே எங்கப்பாவுக்கு மருமகளே

சிம்மாசனத்தை இங்கே கொண்டுவர சொல்லட்டுமா செங்கோலை உன் கையிலே இப்பவே கொடுக்கட்டுமா

மந்திரியை உன்னைக் கண்டு எந்திரிக்க சொல்லட்டுமா என் மந்திரியை உன்னைக் கண்டு எந்திரிக்க சொல்லட்டுமா எந்தப்புறம் பார்த்தாலும் அந்தப்புரம் ஆக்கட்டுமா

யாருக்கோ யாருக்கோ திருமகளே எங்கப்பாவுக்கு மருமகளே


ஆசை என்ற நாடகத்தின் ஆரம்பம் சொன்னவரே ஆணழகன் போட்டியிலே மன்மதனை வென்றவரே

நான் விரும்பும் நாயகனை போலிருக்கும் நல்லவரே நான் விரும்பும் நாயகனை போலிருக்கும் நல்லவரே தான் விரும்பும் பெண்ணை பெறும் தந்திரத்தில் வல்லவரே

யாருக்கோ திருமகனே எங்கப்பாவுக்கு மருமகனே யாருக்கோ திருமகனே எங்கப்பாவுக்கு மருமகனே பொன்னுக்கு நிறம் கொடுக்க பொன்னுக்கு நிறம் கொடுக்க பூமியிலே பிறந்தவனே யாருக்கோ திருமகனே எங்கப்பாவுக்கு மருமகனே

ஆஅஆஅ தாலிக்கட்ட நேரமில்லை கட்டி வைக்க யாருமில்லை தாலிக்கட்ட நேரமில்லை கட்டி வைக்க யாருமில்லை

தட்டிக்கேட்க ஆளுமில்லை நீ தருவதை தந்தாலென்ன தட்டிக்கேட்க ஆளுமில்லை நீ தருவதை தந்தாலென்ன

தட்டிக்கேட்க ஆளுமில்லை ஆஹா நீ தருவதை தந்தாலென்னஆஹா தட்டிக்கேட்க ஆளுமில்லை நீ தருவதை தந்தாலென்ன தட்டிக்கேட்க ஆளுமில்லை நீ தருவதை தந்தாலென்ன நீ தருவதை தந்தாலென்ன

ஊரெல்லாம் கூட்டி வச்சு உறவெல்லாம் பாக்க வச்சு பூவாரம் போடலையே கொஞ்சம் பொறுத்துக்க மனசில்லையே

ஊரெல்லாம் கூட்டி வச்சு ஆஹா உறவெல்லாம் பாக்க வச்சுஆஹா பூவாரம் போடலையே கொஞ்சம் பொறுத்துக்க மனசில்லையே கொஞ்சம் பொறுத்துக்க மனசில்லையே